full screen background image

சோனியா அகர்வால் நாயகியாக நடிக்கும் ‘பிஹைண்ட்’ திரைப்படம்!

சோனியா அகர்வால் நாயகியாக நடிக்கும் ‘பிஹைண்ட்’ திரைப்படம்!

ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக ‘பிஹைண்ட் ‘என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.

ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

அமன் ரஃபி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சந்தீப் சங்கரதாஸ் மற்றும் டி.ஷமீர் முகமத் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். வைசாக் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். இசை முரளி அப்பாதத், ஆரிப் அன்சார் மற்றும் சன்னி மாதவன்.

இதில் பாசமுள்ள உணர்ச்சிகரமான தாயாக லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் நடித்துள்ளார். சோனியா அகர்வாலின் கணவராக கதையின் கதாநாயகனாக ஜினு இ.தாமஸ் நடித்துள்ளார். அவரது மகளாக மினு மோல் நடித்துள்ளார்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகிறது.

ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். தாய்மை தனது குழந்தையைத் தொடர்கிற கண்ணுக்குத் தெரியாத அந்த ஆபத்தை உணர்ந்து கொள்கிறது. ஆனால் அந்தத் தாயின் கணவன் அதை ஒரு மாயை என்று கூறி அலட்சியப்படுத்துகிறான். ஆனால் தாய் ஆபத்தினை உணர்ந்து காப்பாற்றுவதில் கவனமாக இருக்கிறாள்.

ஒரு கட்டத்தில் கணவனும் அந்த அபாயம் உண்மைதான் என்று உணர்ந்து கொள்கிறான். அப்படிப்பட்ட சூழலில் தன் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கப் பின் தொடரும் அந்தத் தீய சக்தியை எதிர்த்து தாய் தீவிரமாகப் போராடுகிறாள் . அவள் தனது குழந்தையை மீட்டாளா? அந்த ஆபத்து எத்தகையது? அது யாரால் ஏற்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதுதான் பிஹைண்ட் திரைப்படம்.

இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம். அதில் உணர்ச்சிகரமான காட்சிகளும் உள்ளன. மூச்சைப் பிடித்துக் கொள்; பின்னால் பதுங்கி இரு என்கிற பரபரப்போடு இந்தப் படம் இருக்கும்.

இதன் படப்பிடிப்பு கேரளாவில் திருச்சூர், வாகமன், குட்டிக்கானம், மூணார், ஏலப்பாறா போன்ற இடங்களில் 40 நாட்கள் நடைபெற்றுள்ளன.

இந்தப் படத்தின் முன்னோட்டமாக ட்ரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறும்.

Our Score