full screen background image

அறிமுக இயக்குநர் லெனின் இயக்கும் ‘பயந்தாங்கோழி’ திரைப்படம்

அறிமுக இயக்குநர் லெனின் இயக்கும் ‘பயந்தாங்கோழி’ திரைப்படம்

‘சிங்கம்’, ‘புலி’, ‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘மாவீரன்’ என படங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ‘பயந்தாங்கோழி’ என்ற பெயரில் ஒரு புதிய படம் வரும் ஜனவரி 14 முதல் துவங்கவுள்ளது.

இந்தப் படத்தை ‘கோலிசோடா’வில் உதவி இயக்குநராக பணியாற்றிய லெனின் என்பவர் இயக்குகிறார். இசை பாபுநாத் மற்றும்  லிஜோ. ஒளிப்பதிவு எஸ்.கண்ணன். இவர் இந்தியில் நட்டி நட்ராஜூடன் பல படங்களில் பணியாற்றியவர். இப்போது தமிழுக்கு வந்துள்ளார்.

‘சதுரங்க வேட்டை’ படத்தில்  அஸோஸியேட் எடிட்டராக  பணியாற்றிய திலீப், நாயகனாக ‘பசங்க’ படத்தில் தேசிய விருது வாங்கிய  கிஷோர்  நடிக்கிறார். இவருடன் பல முன்னணி  நடிகர், நடிகைகளும்  நடிக்கிறார்கள்.  படம் சென்னையில் தொடங்கி புதுச்சேரி, ஊட்டி என வளரவிருக்கிறது. இந்தப் படத்தை  ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்நிறுவனம் ‘நான்’, ‘சாருலதா’ போன்ற பல வெற்றி  படங்களை விநியோகம் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுதான்  முதல்முறையாக தயாரிப்பில் களம் இறங்கியுள்ளது. மேலும்  பி.எஸ்.டி. நிறுவனம், மைல் ஸ்டோன் நிறுவனம், எம் பிக்சர்ஸ் நிறுவனம் என்ற மூன்று நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வெளியிடவுள்ளன.

Our Score