full screen background image

பாலா இயக்கத்தில் அனைத்து தளபதிகளும் இணையும் மெகா திரைப்படம்..!

பாலா இயக்கத்தில் அனைத்து தளபதிகளும் இணையும் மெகா திரைப்படம்..!

இயக்குநர் பாலா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக பிரம்மாண்டமான மல்டி ஸ்டாரர் திரைப்படம் தயாராக இருக்கிறது.

‘சேது’, ‘பிதாமகன்’, ‘நான் கடவுள்’ போன்ற தமிழ் திரையுலகின் முக்கியமான படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா. 

பாலாவின் படங்கள் என்றாலே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.
விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா போன்ற நாயகர்கள் அனைவருமே இவருடைய பட்டறையில் இருந்துதான் பெரிய நாயகர்களாக வளர்ந்திருக்கிறார்கள்.

தற்போது சசிகுமார் நாயகனாக நடித்து பாலா இயக்கியிருக்கும் ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இளையராஜா இசையமைத்திருக்கும் 1000-மாவது படம் இது. விரைவில் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.

தற்போது தனது அடுத்த படத்துக்கான பணிகளில் மும்முரமாகிவிட்டார் இயக்குநர் பாலா. நடிகர்கள் ஆர்யா, விஷால், அரவிந்த் சாமி, அதர்வா, ராணா ஆகியோரை  இணைத்து தமிழ் திரையுலகின் மிகப் பெரிய மல்டி ஸ்டாரர் படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் பாலா.

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றனவாம். அடுத்தாண்டு துவக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பினை துவங்க பாலா திட்டமிட்டு இருக்கிறார். 

முன்னணி நாயகர்கள் பலரும் இப்படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதால், தற்போதே இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அத்தனை பேரும் அடுத்த 2 வருஷத்துக்கு பைத்தியம் பிடிச்சு அலையப் போறாங்கோ..!

Our Score