‘பைரவா’ திரைப்படம் உலகம் முழுவதும் 55 நாடுகளில் வெளியாகிறது..!

‘பைரவா’ திரைப்படம் உலகம் முழுவதும் 55 நாடுகளில் வெளியாகிறது..!

விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குநர் பரதனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பைரவா’ திரைப்படம் வரும் 12-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தை காண விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

இந்த ‘பைரவா’ படம் விஜய்யின் நடிப்பு கேரியரில் புதிய சாதனையொன்றை செய்திருக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மொத்தம் 55 நாடுகளில் இந்தப் படம் ரிலீஸாகவுள்ளதாக இந்தப் படத்தை வெளிநாடுகளில் விநியோகிக்க இருக்கும் A & P நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு தமிழ்த் திரைப்படம் வழக்கமாக வெளியாகும் நாடுகளோடு சேர்த்து தற்போது சில புதிய நாடுகளிலும் ‘பைரவா’ வெளிவரவுள்ளது. 

நைஜீரியா, கானா, கென்யா, உகாண்டா, டான்சானியா, போட்ஸ்வானா, காங்கோ, எத்தியோப்பியா, ருவாண்டா, போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமன்றி உக்ரைன், அல்பேனியா, லிதுவேனியா, லாட்வியா, போலந்து, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் சேர்த்து மொத்தம் 55 நாடுகளில் ‘பைரவா’ வெளியாகவுள்ளது.

அந்தந்த நாடுகளில் வாழும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் இந்தப் படத்தை ஆர்வத்துடன் பார்க்க விரும்பியதன் பேரில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

இது நிச்சயம் தமிழ்ச் சினிமா வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகும்..!

 

Our Score