விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘பைரவா’ படப்பிடிப்பு முடிவடைந்தது..!

விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘பைரவா’ படப்பிடிப்பு முடிவடைந்தது..!

‘எங்க வீட்டு பிள்ளை’, ‘உழைப்பாளி’, ‘நம்மவர்’, ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’ உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட வெற்றி படங்களை தயாரித்த  பாரம்பரிய நிறுவனமான விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் B.பாரதி ரெட்டி தயாரிப்பில் விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு, நேற்று பூசணிக்காய் உடைப்புடன் முடிவடைந்தது.

இந்நிகழ்வில் விஜய், தயாரிப்பாளர் B.வெங்கட்ராம ரெட்டி, B.பாரதி ரெட்டி, இயக்குநர் பரதன், ஒளிப்பதிவாளர் சுகுமார், எடிட்டர்  பிரவீன், கலை இயக்குநர் பிரபாகரன், தலைமை  நிர்வாகி ரவிச்சந்திரன், முதன்மை  தயாரிப்பு நிர்வாகி  குமரன்  மற்றும் படக் குழுவினருடன் ‘பைரவா’ திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும்   வெளியிடும்  ஸ்ரீகிரீன் புரொடக்க்ஷன்ஸ்  சரவணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

img_9610

விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில்,  ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, சரத் லோகிதாஸ்வா, சதிஷ், அபர்ணா வினோத், சிஜு ரோசலின், பாப்ரிகோஷ்,  மைம்கோபி, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சுகுமார், படத் தொகுப்பு – பிரவீண், இசை – சந்தோஷ் நாராயணன், பாடல்கள் – வைரமுத்து, கலை இயக்கம் – பிரபாகரன், சண்டை பயிற்சி   –  அனல் அரசு, நடனம்  _  தினேஷ், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹமது. தயாரிப்பு மேற்பார்வை – தாண்டவ கிருஷ்ணன் & உதயகுமார், முதன்மை தயாரிப்பு நிர்வாகி – குமரன், தலைமை நிர்வாகி – ரவிச்சந்திரன்.

தற்போது ‘பைரவா’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் பணி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாடல்கள்  விரைவில் வெளிவரவுள்ளது.

Our Score