அம்மன்யா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மஞ்சு நாதாவின் தயாரிப்பில் ஆரி அர்ஜுனன் நடிக்கும் ‘பகவான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நடுவில் வெளியிடப்பட்டது.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜிதா பொன்னாடா அறிமுகமாகிறார். இவர் தெலுங்கில் 11-க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்படத்தில் யோக் ஜேப்பி, ஆடுகளம் நரேன். ஜெகன். முருகதாஸ், டெல்லி கணேஷ், லக்கி நாராயணன், ஜேம்ஸ் பேர்ரட். பாண்டி. அலெக்ஸ், சுகன்யா, கிருஷ்ணா, ஜெகதீஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – காளிங்கன், இசை – பிரசன் பாலா, ஒளிப்பதிவு – முருகன், சரவணன், படத் தொகுப்பு – அதுல் விஜய், காஸ்ட்யூம் டிசைனர் – வினயா தேவ், பாடலாசிரியர் – சம்பத்.ஜி, சண்டை இயக்கம் – ஹரி தினேஷ், ஸ்டில்ஸ் – மணிகண்டன், டிசைன்ஸ் – GET IN DREAM ஸ்டுடியோஸ், மக்கள் தொடர்பு – எம்.பி.ஆனந்த், தயாரிப்பு மேற்பார்வை – மூவேந்தர பாண்டியன், நிர்வாகத் தயாரிப்பாளர் – சுமி பாஸ்கரன், Line producer – முருகன் சரவணன், Co Producer – S.ஸ்ரீனிவாசா, முருகன் சரவணன், தயாரிப்பு – சி.வி.மஞ்சுநாதா.
இந்த பகவான் திரைப்படம் தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி படமாகும்.
இப்படம் 80% முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் ஜனவரி மாத இறுதியில் நடக்க இருக்கிறது.