“பேச்சுலர்’ அடல்ட் படமில்லை…” என்கிறார் இயக்குநர் சதீஷ் செல்வக்குமார்

“பேச்சுலர்’ அடல்ட் படமில்லை…” என்கிறார் இயக்குநர் சதீஷ் செல்வக்குமார்

ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் G.டில்லிபாபுவின் Axess Film Factory  நிறுவனம் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களை தயாரித்து வருகிறது.

ஒவ்வொரு படமும் தயாரிப்பு நிலையின்  வெவ்வேறு கட்டங்களில் இருந்து  வருகிறது.  அப்படங்களில் முக்கியமானதொரு படைப்புதான் பேச்சிலர்’ திரைப்படம்.

இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். ஜீ.வி.பிரகாஷூக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடிக்கிறார். மேலும் பகவதி பெருமாள், YouTube நக்கலைட்ஸ் புகழ் அருண் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இயக்குநர்  சசியிடம் உதவி இயக்குநராக இருந்த சதீஷ் செல்வகுமார், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் டீஸர் நேற்றைக்கு வெளியானது. டீசரை வைத்துப் பார்த்தால் படம் அடல்ட் ஒன்லி படமோ என்ற எண்ணம் அனைவருக்கும் வருகிறது. ஆனால் படத்தின் இயக்குநரோ படம் அடல்ட் படமில்லை.. குடும்பத்தினருடன் பார்க்கக் கூடிய படமாகத்தான் இருக்கும் என்கிறார்.

படம் குறித்து இயக்குநர் சதீஷ் செல்வக்குமார் பேசும்போது. “கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் வந்து ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாழ்வில், ஒரு பெண் குறிக்கிடும்போது நடக்கும் சம்பவங்களே இந்தப் படம்.

இளம் பிராயத்து இளைஞன், வளர்ந்த ஆண் மகன் என ஜீ.வி.பிரகாஷ்குமார் இப்படத்தில் இருவிதமான தோற்றங்களில் அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். தேனி ஈஸ்வர் படத்தில் ஒவ்வொரு ஃப்ரேமையும் அழகுடன் செதுக்கியுள்ளார்.

படத்தின் டீஸர், இப்படம் வயது வந்தோர்க்கான படமாக தோற்றம் தரலாம். ஆனால், இப்படம் குடும்பத்தில் அனைவரும் இணைந்து பார்க்கும்படியான படமாகும்.  படத்தில் எந்த விதமான சர்ச்சைக்குரிய விசயங்களும் இல்லை. வாழ்வின் எதார்த்தத்தை அப்படியே அதே அளவில் படம் சொல்லும். அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இருக்கும்…” என்றார்.

Our Score