full screen background image

ஜீ.வி.பிரகாஷின் ‘பேச்சிலர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..!

ஜீ.வி.பிரகாஷின் ‘பேச்சிலர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து லாபம் தரக் கூடிய வெற்றி படங்களாகவும், அதே நேரம் ரசிகர்களின் மனங்களை கவரும் தரமான படைப்பாகவும் தந்து வரும் தயாரிப்பாளர் G.டில்லிபாபுவின் Axess Film Factory  நிறுவனம் தற்போது ஒரே நேரத்தில் சில முக்கிய படங்களை தயாரித்து வருகிறது.

ஒவ்வொரு படமும் தயாரிப்பு நிலையின்  வெவ்வேறு கட்டங்களில் இருந்து  வருகிறது.  அப்படங்களில் முக்கியமானதொரு படைப்புதான் பேச்சிலர்’ திரைப்படம்.

இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். ஜீ.வி.பிரகாஷூக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடிக்கிறார். மேலும் பகவதி பெருமாள், YouTube நக்கலைட்ஸ் புகழ் அருண் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இயக்குநர்  சசியிடம் உதவி இயக்குநராக இருந்த சதீஷ் செல்வகுமார், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுதும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் G.டில்லிபாபு பேசும்போது, “இது பேச்சிலர்’ படத்தின் மொத்த படக் குழுவிற்குமே மிகவும் உற்சாகமான தருணம். ஜீ.வி.பிரகாஷின் மாயாஜால இசை ஏற்கனவே கணக்கற்ற வகையில் ரசிக இதயங்களை கொள்ளையடித்துள்ளது.

எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இது மிக முக்கியமான, அற்புதமானதொரு ஆல்பம். தற்போது இசை உலகில் கோலோச்சும் Think Music நிறுவனம் இந்தப் படத்தின் இசை உரிமையை பெற்றுள்ளது. இதனால் இத்திரைப்படத்தின் பாடல்கள் உலகம் முழுதும் உள்ள அனைத்து இசை ரசிகர்களையும் சென்றடையும் என்பது உறுதி.

விரைவில் பாடல்கள் வெளியீடு பற்றிய அறிவிப்பை,  டிரெய்லர் மற்றும் படத்தின் உலகளாவிய ரிலீஸ் தேதியுடன் அறிவிக்க உள்ளோம்…” என்றார்.

Our Score