RUN HORSE MEDIA என்கிற புதிய நிறுவனம் அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குநரும் மற்றும் தயாரிப்பாளருமான திரு. அஜய்குமார் கூறுகையில், “டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்கையை மையக் கருவாக வைத்து உருவாகவிருக்கும் திரைப்படம்தான் ‘பாபா சாகேப்’.
இது சாதி தலைவரின் படம் அல்ல, தேசத் தலைவரின் படம் என்பதை கருத்தாக கொண்டு உருவாகவிருக்கும் படம்.
தமிழ் சினிமாவில் இப்பொழுதெல்லாம் ரவுடிகளின் வாழ்கையை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வருகிறது.. நாம் ஏன் ஒரு தேசத் தலைவரின் வாழ்கையை அடிப்படையாக கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்க கூடாது என்ற எண்ணத்தில்தான் இத்திரைப்படத்தை உருவாக்கவிருக்கிறேன்.
ஹாலிவுட்டில் அட்டன்பிரோ என்ற இயக்குநர் காந்தியின் வாழ்கையை திரைப்படமாக எடுத்திருக்கும்பொழுது, தமிழனாகிய நான் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்ககூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த ‘பாபா சாகேப்’.
அம்பேத்கர் உருவம் கொண்ட ஒருவருக்காக சுமார் 10,000 பேருக்கும் மேல் தேர்வு நடத்தினோம், கிடைக்கவில்லை.
இறுதியாக எங்கள் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு.மோகன் அவர்கள் ‘ஆய்வுக்கூடம்’ திரைப்படத்தின் நாயகன் ராஜ கணபதியை அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் தோற்றத்தில் பாபா சாகேப் போல உள்ளதால் அவரையே அம்பேத்கர் வேடத்திற்கு தேர்வு செய்தோம்.
மேலும் இத்திரைப்படத்திற்காக அம்பேத்கரின் குழந்தை மற்றும் இளமை வயது தோற்றத்திற்கும் பாரதியார், பெரியார் போன்ற பல்வேறு தலைவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
அண்ணல் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் கொண்டாட்டமும், நடிகர்களுக்கான தேர்வும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது,
இந்த விழாவை அனைத்து இந்திய பாதுகாப்பு H.V.F. அண்ணல் அம்பேத்கர் தேசிய தொழிலாளர் சங்கத்தால் நடத்தப்படவிருக்கிறது.
நாள் :19/06/2016
இடம் : வள்ளுவன் வாசுகி மண்டபம், அஜய் விளையாட்டு அரங்கம் அருகில்,
ஜெகஜீவானந்தம் சிலை சாலை, முருகப்பா கல்லூரி பஸ் ஸ்டாப், ஆவடி,
சென்னை – 54
தொடர்பு; 80569 46323,70929 51113.
MAIL: ajaays2015@gmail .com
BANNER – RUN HORSE MEDIA
PRODUCER & DIRECTOR – அஜய் குமார்.S
CO-PRODUCER – ஸ்டெல்லா மேரி
CINEMATOGRAPHER – மோகன்.S
MUSIC – தேனிசை தென்றல் தேவா
ART – P.C மணி வர்மா
PRO – M.P ஆனந்த்










