நேற்றைய தினம் தங்களது நிறுவனத்தில் 120 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டதாக ‘லைகா’ நிறுவனம், புகழ் பெற்ற மற்றொரு நிறுவனமான ‘ஐங்கரன்’ நிறுவனத்தின் தலைவரான கருணாமூர்த்தியைக் குற்றஞ்சாட்டியது.
இது தொடர்பாக கருணாமூர்த்தியையும், அவரது பெண் உதவியாளர் பானுவையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரி ‘லைகா’ நிறுவனத்தின் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
அந்த மனுவில் ‘ஐங்கரன்’ கருணாமூர்த்தி ‘லைகா’ நிறுவனத்தை எந்த அளவுக்கு ஏமாற்றினார்.. பணத்தைத் திட்டமிட்டு சுரண்டியிருக்கிறார் என்றெல்லாம் பகீர் என்ற குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தது ‘லைகா’ நிறுவனம்.
அந்தக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய பதிவு இது : https://www.tamilcinetalk.com/lyca-ayngaran-karunamoorthy-complaint-news/
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு இன்றைக்கு பதில் அளித்திருக்கிறார் ‘ஐங்கரன்’ நிறுவனத்தின் தலைவரான கருணாமூர்த்தி.
‘லைகா’ நிறுவனத்தின் அனைத்துவிதக் குற்றச்சாட்டுக்களையும் மறுக்கும் கருணாமூர்த்தி ‘லைகா’ நிறுவனத்தின் தலைவரான சுபாஷ்கரன் வேண்டுமென்றே தன் மீது பொய்ப் புகாரை எழுப்பியிருக்கிறார் என்று கடுமையாக மறுத்திருக்கிறார்.
இது குறித்து ‘ஐங்கரன்’ நிறுவனத்தின் தலைவரான கருணாமூர்த்தி வெளியிட்டிருக்கும் செய்திக் அறிக்கைகள் இங்கே :