தனக்கு கொடுக்கப்பட்ட எந்த ஒரு கதாபாத்திரத்திலும் அசத்துபவர் நடிகர் சித்தார்த். ஒரே மாதிரியான படங்களில் என்றுமே நடிக்காத அரிய நடிகர் அவர். அவரது நடிப்பில் உருவாகும் அடுத்த படமான ‘அவள்’ ஒரு பேய் படமாகும்.
சுவாரஸ்யமாக எடுக்கப்பட்ட, உண்மையான அச்ச உணர்வை தூண்டும் பேய் படங்கள் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டு காலமாக உண்மையான பேய் படங்களைவிட பேய் காமெடி படங்களே தமிழ் சினிமாவில் அதிகமாக வெளியானது. இதனால் மக்களிடத்தில் பேய் படம் பார்க்கும்போது வரும் அச்ச உணர்வை தகர்த்து விட்டது என்று கூறலாம். இது பேய் படம் ரசிக்கும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்து வந்தது.
இந்நிலையில் சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியாவின் நடிப்பில், இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மிலிண்ட் ராவ் இயக்கத்தில், ‘Etaki Entertainment’ நிறுவனமும் ‘Viacom 18 Motion Pictures’ நிறுவனமும் இணைந்து இந்த உறைய வைக்கும் இந்த பேய் படத்தை தயாரித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் வெளியான ‘அவள்’ படத்தின் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திகிலில் உறைய வைக்கும் ஒரு உண்மையான பேய் படத்தை காண உள்ளோம் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைத்துள்ளது இந்த டீஸர்.
இந்த டீஸர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. சிறந்த ஒளிப்பதிவு, பயம் உண்டாக்கும் இசையமைப்பு, படமாக்கியுள்ள விதம், சொல்லப்படவுள்ள கதை, நடிகர்களின் அபாரமான நடிப்பு ஆகியவை இந்த டீசருக்கு இவ்வளவு பெரிய வெற்றியை தந்துள்ளது.
உண்மையான பேய் பட ரசிகர்களுக்கு ‘அவள்’ திரைப்படம் ஆங்கில படங்களுக்கு இணையாக இருக்கும் ஒரு திகில் படம் எனக் கூறலாம்.