‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது. 

‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது. 

OTT டிஜிட்டல் தளத்தில் பலவிதமான வெப் சீரிஸ்கள் வெளியாகி வரும் வேளையில் Trident Arts நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன், ஒளிப்பதிவாளர்  மனோஜ் பரமஹம்ஷாவுடன் இணைந்து தயாரித்திருந்த ‘ஆட்டோ சங்கர்’ தொடர், Zee5 OTT தளத்தில் வெளியானபோதே பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இத்தொடரில் மலையாள நடிகரான சரத் ‘ஆட்டோ சங்கர்’ வேடமேற்றிருந்தார். அர்ஜீன் சிதம்பரம், ஸ்வயம் சித்தா, ராஜேஷ் தேவ் மற்றும் பிரவீன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

அரோல் கரோலி இசையமைக்க, மனோஜ் பரமஹம்ஷா ஒளிப்பதிவு செய்ய, மணிகண்டன் ஆட்டோ ஷங்கர் கதையை எழுதியிருந்தார்.

auto shankar-poster

ஒரு திரைப்படத்திற்கு இணையான தரத்தில் அறிமுக இயக்குநர் ரங்காவின் சிறப்பான இயக்கத்தில் உருவாக்கப்பட்டிருந்த இந்த ‘ஆட்டோ சங்கர்’ தொடர், வெளியான உடனேயே திரையுலகம் மட்டுமல்லாமல் டிஜிட்டல் பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டையும் பெற்றிருந்த நிலையில் இப்போது  ‘MTV IWM DIGITAL AWARDS’ விருதையும் வென்றுள்ளது.

auto shankar-awards-3

இந்த விருது பற்றி தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளருமான மனோஜ் பரமஹம்ஷா பேசும்போது, “இதுதான் தமிழில் வெளியான வெப் சீரிஸ்களில் முதல் தரமான ஒன்று. Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன் என்னுடன் இணைந்து இதனைத் தயாரித்திருந்தார். இதனைத் தயாரித்தற்கு நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்.

நாங்கள் மொத்த சீரிஸையும் பற் பல முன் தயாரிப்புகளுடன் 35 நாட்களில் சென்னையை சுற்றியே படப்பிடிப்பினை நடத்தி முடித்தோம்.

ஆனால் கதையில் காலத்தை கொண்டு வருவதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உழைத்தோம். 1985 முதல் 1990 வரையிலான காலத்தை கண் முன் கொண்டு வருவதற்கு பெரும் பாடுபட்டோம். இது பெரிய அளவில் கவனம் பெற்று சினிமாத் துறையில் இருந்தே பலரும் பாராட்டினார்கள்.

auto shankar-awards-1

தமிழின் மிகச் சிறந்த இயக்குநரான வெற்றிமாறன் இதனை தனியாகக் குறிப்பிட்டு எங்களைப் பாரட்டினார். இப்போது எங்களது சிரீஸ் அடுத்த கட்ட பாராட்டை பெற்றுள்ளதில் எங்களுக்கு பெருமகிழ்ச்சி.

மும்பையில் சமீபத்தில் நடந்த MTV IWM DIGITAL AWARDS விழாவில் சிறந்த பிராந்திய மொழி தொடர் என்கிற விருதினை எங்களது ‘ஆட்டோ சங்கர்’ தொடர் பெற்றுள்ளது.

‘எம் டிவி’ வழங்கும் இந்த விருது  வருடாவருடம் ஹிந்தி மற்றும் ஏனைய பிராந்திய மொழிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

auto shankar-awards-2

இந்த விருதை ‘ஆட்டோ சங்கர்’ தொடருக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய மணிகண்டனும், தொடரை இயக்கிய இயக்குநர் ரங்காவும் நேரில் சென்று பெற்றுக் கொண்டனர்.

நாங்கள் தயாரித்த முதல் தொடரே பெரும் வெற்றியையும் பெற்று, விருதுகளையும் பெற்றதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறோம்..” என்றார்.

Our Score