‘அட்ரஸ்’ படத்தில் புரட்சியாளனாக நடித்திருக்கும் அதர்வா முரளி

‘அட்ரஸ்’ படத்தில் புரட்சியாளனாக நடித்திருக்கும் அதர்வா முரளி

தனது முதல் படமான ‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தில் சிறந்த இயக்குநர் என்ற பாராட்டைப் பெற்றவர் இயக்குநர் இராஜமோகன். இதையடுத்து ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தை  இயக்கினார். இதை தொடர்ந்து தற்போது ‘அட்ரஸ்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது ஜோடியாக பூஜா ஜாவேரி நடிக்கிறார்.

மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பி ராமையா, தேவதர்ஷினி,  ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன்,  கோலி சோடா’ முத்து  மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இசை – கிரிஷ் கோபாலகிருஷ்ணன், பாடல்கள் – சினேகன், மோகன் ராஜன், ‘கானா’ ஹரி, படத் தொகுப்பு – தியாகு, புகைப்படங்கள் – குமார், சண்டை இயக்கம் – சில்வா, மக்கள் தொடர்பு – ஜான்சன்.

இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாமலும் ஒரு ஊர் இருந்திருக்கிறது. ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிந்தபோது தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை.

ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி  இந்த படத்தை இயக்குகிறார் இயக்குநர் இராஜமோகன்.

இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு புரட்சிகரமான ‘காளி’ என்கிற ஒரு இளைஞனின் வேடத்தில் நடிகர் அதர்வா முரளி நட்புக்காக நடித்து கொடுத்துள்ளார்.

உண்மை சம்பவத்தில்.. முக்கிய கதாபாத்திரம் என்றவுடன் உடனேயே நடித்துக் கொடுத்தாராம் அதர்வா முரளி. இவருக்கு ஒரு காதல் பாடல் காட்சியும், இரண்டு சண்டை காட்சிகளும், புரட்சிகரமான வசனம் பேசும் பல காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த கேரக்டர் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெறும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மலையும்.. மலை சார்ந்த பகுதிகளிலும் நடைபெற்றது. கொடைக்கானலில் இருந்து 8 கிலோ மீட்டர் மலை மீது நடந்து சென்று வெள்ளக் கவி’ என்ற கிராமத்தில் படப்பிடிப்பினை நடத்தியுள்ளார்கள்.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் & டீசர் இன்று வெளியாகியுள்ளது.

 
Our Score