full screen background image

அதர்வா முரளி-நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் துவங்கியது!

அதர்வா முரளி-நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் துவங்கியது!

ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார் வழங்கும், இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ’டி.என்.ஏ.’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியுள்ளது!

’மனம் கொத்தி பறவை’, ’டாடா’, ’கழுவேத்தி மூர்க்கன்’ போன்ற பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றிப் பெற்ற பல படங்களைக் கொடுத்த ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத்குமார், இப்போது தனது அடுத்தப் படத்தை அறிவித்திருக்கிறார்.

க்ரைம்-டிராமா ஜானரில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு ’டி.என்.ஏ.’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

குடும்ப பார்வையாளர்களின் மனதை வென்ற நடிகர் அதர்வா முரளிக்கு இந்தத் திரைப்படம் மற்றுமொரு பாராட்டுக்குரியதாக நிச்சயம் இருக்கும். சமீபத்தில் வெளியான ‘சித்தா’ படத்தில் தனது அசத்தலான நடிப்பால் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகை நிமிஷா சஜயன், இந்தப் படத்தில் அதர்வா முரளிக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்கிறார்.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் முதல்முறையாக அதர்வா முரளியுடன் இந்தப் படத்தின் மூலம் இணைகிறது.

‘ஒரு நாள் கூத்து’, ’மான்ஸ்டர்’ மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ’ஃபர்ஹானா’ போன்ற சிறந்தப் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

படத்தின் படப்பிடிப்பு இன்று(அக்டோபர் 11, 2023) பூஜையுடன் தொடங்கியது. இதில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

முழு படமும் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. திட்டமிட்டபடி குறுகிய காலத்தில் விரைவாக முடிவடையும்.

மற்ற நடிகர்கள் மற்றும் படக் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Our Score