full screen background image

‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’ படத்தின் ‘ஏனடி’ பாடல் காட்சி..!

‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’ படத்தின் ‘ஏனடி’ பாடல் காட்சி..!

சில்வர் ஸ்கிரீன் ஸ்டூடியோர் சிவ ரமேஷ்குமார் தயாரித்துள்ள புதிய படம் ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’..!

இந்தப் படத்தில் பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். ஹீரோயினாக ரேஷ்மா ரத்தோர் நடித்திருக்கிறார். கருணாகரன் படத்தின் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – பி.கே.வர்மா, படத் தொகுப்பு – ஏ.எல்.ரமேஷ், இசை – டி.இமான், பாடல்கள் – யுகபாரதி, இணை தயாரிப்பு – தர்பாபு, எம்.பிரதீப், எழுத்து, இயக்கம் – ஆர்.இன்பசேகர்.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஏனடி’ என்கிற பாடலின் வீடியோ காட்சியும், மேக்கிங் காட்சியும் சமீபத்தில் யுடியூபில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. டி.இமானின் இசையில், யுகபாரதியின் வரிகளை கார்த்திக் மற்றும் ஷ்ரேயா கோஷல் இருவரும் பாடியுள்ளனர்.

இத்திரைப்படத்தின் டீஸர் வரும் மே 9-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.

Our Score