full screen background image

அசோக் செல்வன் – சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

அசோக் செல்வன் – சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
லெமன் லீப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் கணேசமூர்த்தி, சௌந்தர்யா கணேசமூர்த்தி. நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான பா.இரஞ்சித் ஆகியோர் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரித்திருக்கிறார்கள்.
 
இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
இயக்கம் – ஜெய்குமார். திரைக்கதை & வசனம்- தமிழ் பிரபா & ஜெய்குமார், இசை – கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு – தமிழழகன், கலை இயக்கம் –  ரகு, படத் தொகுப்பு –  செல்வா ஆர்.கே., ஆடைகள் – ஏகாம்பரம், புகைப்படங்கள் –  ராஜா.
 
இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

 
இளைஞர்களின் முக்கிய விளையாட்டாகிப்போன கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியிருக்கிறது.
 
கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், அவர்களின் நட்பு, காதல், என ஜனரஞ்சகமான படமாக எல்லோரும் ரசிக்கும்விதமாக இருக்கும் என்கின்றனர் படக் குழுவினர்.
 
அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
 
Our Score