கல்சன் மூவீஸ் பட நிறுவனம் திறமையுள்ள கலைஞர்களை அடையாளம் கண்டு உற்சாகப்படுத்தி தரமான படங்களை தொடர்ச்சியாக தரும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.
இந்த கல்சன் மூவீஸ் நிறுவனம் தற்போது ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிக்க மணி நாகராஜ் இயக்கத்தில் ‘பென்சில்’ என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருகிறது. முடிவடையும் நிலையில் உள்ள இந்த ‘பென்சில்’ படத்தை அடுத்து ‘நெடுஞ்சாலை’ கிருஷ்ணா இயக்கத்தில், ஆரி நடிக்கும் ‘மானே தேனே பேயே’ என்ற படத்தையும் தயாரிக்கிறார்கள். அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இப்படங்களை தொடர்ந்து மூன்றாவதாக ‘அருவி’ என்ற படத்தையும் தயாரிக்கவுள்ளது.
இதில் சந்துரு கதாநாயகனாக நடிக்கிறார். இவர் திரைக்கு வர உள்ள ‘ஷிவானி’ என்ற படத்தின் நாயகன். நாயகியாக ‘நெடுஞ்சாலை’ படத்தின் கதாநாயகி ஷிவதா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கிஷோர் நடிக்கிறார். இன்னும் சில முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள் அதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருகிறது.
ஒளிப்பதிவு – M.G. முத்தையா
இசை – ராஜேஷ்ராஜ் (இவர் மலையாள இசையமைப்பாளர் ஜாஸி கிப்டிடம் உதவியாளராகப் பணியாற்றியதுடன் இரண்டு மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.)
பாடல்கள் – ஜெயந்தா
கலை – ராஜமோகன்
எடிட்டிங் – M.V.ராஜேஷ்குமார்
கதை – சரவணன்
திரைக்கதை, வசனம், இயக்கம் – நீலன். (இவர் கிருஷ்ணா நடித்த ‘அலிபாபா’ என்ற படத்தை இயக்கியவர்.
தயாரிப்பு – கல்சன் மூவீஸ் (பி ) லிட்
படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது… “இதுவொரு ஜனரஞ்சகமான படம். எமோஷனல் கதையை சுவைபட சொல்கிறோம். வீழ்ச்சியிலும் அழகியலை கொண்டது அருவி…. அருவி விழும்போது அதில் மயங்காதவர்கள் இல்லை. இந்த ‘அருவி’ நிச்சயம் நல்ல படமாக உருவாகும்.. விரைவில் படப்பிடிப்பை துவக்க உள்ளோம்…” என்றார் இயக்குனர் நீலன்.