full screen background image

மனிதம் பற்றிப் பேச வரும் ‘அருவி’ திரைப்படம்

மனிதம் பற்றிப் பேச வரும் ‘அருவி’ திரைப்படம்

வருடக் கடைசியானாலும் இன்னமும் இந்தாண்டுக்கான சிறந்த நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பட்டியலை முடிவு செய்ய முடியாத சூழலுக்குத் தள்ளியிருக்கிறது வரப் போகும் ‘அருவி’ திரைப்படம்.

பல உலகளாவிய திரைப்பட விழாக்களில் பல விருதுகளைப் பெற்றுக் குவித்திருக்கும் இத்திரைப்படம், இந்த மாதம் வெளியாகவிருப்பதால் இந்த ‘அருவி’க்காக இப்போது திரை விமர்சகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

IMG_1367

இந்த ‘அருவி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நண்பகலில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, இயக்குநர் அருண் பிரபு, நாயகி அதீதி பாலன், நடிகர், இயக்குநர் கவிதா பாரதி, இசையமைப்பாளர் வேதாந்த் , ஒளிப்பதிவாளர் ஷெல்லி, படத் தொகுப்பாளர் ரேமன்ட், கலை இயக்குநர் சிட்டிபாபு, நடிகர்கள் ஸ்வேதா சேகர், அஞ்சலி வரதன், மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசும்போது, “இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச் சிறந்த படம் இதுதான்.

உலகளவில் நடைபெறக் கூடிய திரைப்பட விழாக்களில் நீங்கள் தயாரித்த படங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்கும்போது சில படங்களின் பெயர்களை மட்டும்தான் என்னால் கூற முடிந்தது.

ஏன்…? என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் என்னால் கூற முடியவில்லை என்ற சிந்தனை என்னுள் இருந்து வந்தது. அப்போதிலிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும் வகையில் படங்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

IMG_1370

இயக்குநர் சக்தி சரவணன்தான் நான் ‘பிரியாணி’ படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, இப்படத்தின் கதையை கேட்குமாறு என்னிடம் கூறினார். இரவு 9 மணிக்கு மேல்தான் ‘அருவி’ படத்தின் கதையை இயக்குநர் அருண் பிரபு. என்னிடம் கூறினார். அவர் கதை சொன்னவிதமே புதுமையாக இருந்தது.

கதை சொல்லும்போது அந்த அந்த கதாபாத்திரமாகவே மாறி, இசையோடு கதையைக் கூறினார். நாங்கள் படத்தின் கதையை பெரிதாக நம்பினோம். மக்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்குள் இப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

‘அருவி’யை பொறுத்தவரை படத்தை நாங்கள் இந்த பட்ஜெட்டில்தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்கள் தயாரிப்பு குழுவும், இயக்குநர் குழுவும் கடுமையாக உழைத்து படத்தை தரமான படமாக உருவாக்கியுள்ளனர்.

இயக்குநர் மற்றும் படக் குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர். இயக்குநர் ஷங்கர் அவருடைய படங்களை எடுக்க எந்த அளவுக்கு மெனக்கெடுவாரோ, அதே அளவுக்கு அருணும், அவருடைய குழுவினரும் ‘அருவி’க்காக கடுமையாக உழைத்தனர்.

‘அருவி’ கதாபாத்திரத்தில் முதலில் இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பின்னர் புதுமுகத்துக்கே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். ‘அருவி’ கதாபாத்திரத்துக்காக 5 பெண்களிடம் இயக்குநர் Audition செய்துதான் ஹீரோயினை தேர்வு செய்தார்.

சென்சாரில் இந்த படத்தை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற பயம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அவர்களுக்கு இந்த படம் பிடித்திருந்தது. ‘நல்ல படம்’ என்றார்கள். சில படங்கள் எளிதாக சென்சார் ஆகிவிடும் என்று நினைப்போம். ஆனால் எதிர்பாராத ஒன்றுதான் நடக்கும். அந்த வகையில் இந்தப் படத்தின் அனுபவம் எனக்கு புதுமையாக இருந்தது…” என்றார் தயாரிப்பாளர் S.R.பிரபு.

இயக்குநர் அருண் பிரபு பேசும்போது, “இந்த ‘அருவி’ திரைப்படம் மனிதத்தை பற்றி பேசும் படமாக இருக்கும். நான் உதவி இயக்குநராக பணியாற்றிய என்னுடைய குருக்களான இயக்குநர்கள் பாலுமகேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு நன்றிகள்…” என்றார். 

Our Score