அருண் வைத்தியநாதனின் படத்தில் வரலட்சுமி

அருண் வைத்தியநாதனின் படத்தில் வரலட்சுமி

‘கப்பல்’ திரைப்படத்தை வெற்றிகரமாகக் கரை சேர்த்த ‘பேஷன் பிலிம் ஃபேக்டரி’ அடுத்ததாக ஒரு பிரமாண்ட த்ரில்லர் கதையுடன் களம் இறங்குகிறார்கள்.

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அர்ஜுன், பிரசன்னா, வைபவ், பாபி சிம்ஹா நடிக்கிறார்கள் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்த்து. இப்போது இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் இணைகிறாராம்.

ஹாலிவுட் தரத்தில் உருவாகப் போகும் இப்படத்தில் இவர்களுடன், திரையுலகின் மேலும் சில முன்னணி நடிகர்களும் பங்களிக்க இருக்கிறார்கள்.

மலையாளத்திலும், இந்தியிலும் மட்டுமே பெரிதாக உருவான ‘மல்ட்டி-ஸ்டாரர்’ திரைப்படங்களுக்கு இணையாக, தமிழில் அப்படி ஒரு ‘பல முன்னணி-நடிகர்’ குழுவை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அருண் வைத்தியநாதன்.

ஒளிப்பதிவாளர் அர்விந்த்  கிருஷ்ணா, இசையமைப்பாளர் நவீனுடன் படத் தொகுப்பை ஏற்றிருக்கிறார் சதீஷ் சூர்யா. முற்றிலும் புதிய கோணத்தில், மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை உமேஷ், சுதன் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

Our Score