full screen background image

இயக்குநர் மித்ரன் R.ஜவஹர் இயக்கும் புதிய படம் ‘அரியவன்’

இயக்குநர் மித்ரன் R.ஜவஹர் இயக்கும் புதிய படம் ‘அரியவன்’

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கி வரும் அடுத்த படம் ‘அரியவன்’.

எம்.ஜி.பி. மாஸ் மீடியா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வழங்குகிறது.

இந்தப் படத்தில் அறிமுக நாயகன் ஈஷான் மற்றும் அறிமுக நாயகி ப்ராணலி ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா, ரமா, ரமேஷ் சக்ரவர்த்தி, சூப்பர் குட் சுப்ரமணி, ரவி வெங்கட்ராமன் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு – கே.எஸ்.விஷ்ணுஸ்ரீ, கதை – மாரிச்செல்வன், படத் தொகுப்பு – மா.தியாகராஜன்.  

இத்திரைப்படம் சமூகத்தில் பெண்கள் மீதான பல்வேறு வன்முறைகளுக்கு தீர்வு காணும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பாடல்கள், டீஸர் மற்றும் ட்ரெய்லர் விரைவில் வெளிவர உள்ளது.

இந்தப் புதிய படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார். இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் படத்தை வருகிற மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக் குழு முழு வீச்சில் வேலை செய்து வருகிறது.

Our Score