தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை சொல்லும் ‘அரச குலம்’ திரைப்படம் 

தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை சொல்லும் ‘அரச குலம்’ திரைப்படம் 

BR.SAIN Films என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் பூமாராம் சைன் தயாரித்துள்ள  புதிய திரைப்படம் ‘அரச குலம்.’

இந்தப் படத்தில்  ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் ‘வெள்ளிக்கிழமை  13- ம் தேதி’, ‘13 ம் பக்கம் பார்க்க’ போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.  கதாநாயகியாக நயனா நாயர் நடித்துள்ளாறார். மற்றும் குட்டி புலி ராஜசிம்மன்,  ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ,  ராஜா,  அம்பானி ஷங்கர், பாலமுருகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - S.R.சந்திரசேகர், இசை – வேலன் சகாதேவன், படத் தொகுப்பு –ஆர்.ஜி.ஆனந்த், நடனம் - சிவராக் சங்கர், சண்டை பயிற்சி –  டைகர் பாபு, கலை இயக்கம் – சண்முகம், பாடல்கள் - பத்மாவதி, நளங்கிள்ளி, இணை தயாரிப்பு - பாலமுருகன், ஜெயக்கொடி, பாண்டி, வரதராஜ் தயாரிப்பு - S. பூமாராம் சைன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - குமார் மாறன்.

Behind  The Scenes - பிரசாத், ஜெயகுமார்,  Liberty Films –கோவிந்தராஜ், Sri Ulagamatha Films  -  கே.சந்திரசேகர் ஆகிய மூன்று பேர் இணைந்து இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் குமார் மாறன், "இதுவரையில் ௭ந்த தமிழ் சினிமாவிலும் சொல்லப்படாத ௨ண்மைக் கதைதான் இந்த ‘அரச குலம்’ திரைப்படம்.

ஆண்டாண்டு காலமாக தென் மாவட்ட மக்களை தவறாக சித்தரித்து காட்டப்படும் படங்களுக்கு பதில் சொல்லும்விதமாகவே இதனை உருவாக்கியிருக்கிறோம்.

தென் மாவட்ட மக்களை ‘இனவெறி பிடித்தவர்கள்’ ௭ன்றும், ‘சாதிவெறி பிடித்தவர்கள்’ ௭ன்று திரைப்படங்களின் மூலமாக பொய்ச் செய்தி பரவி வரும் இந்த வேளையில், அந்தப் பகுதி மக்களின் நேசம், குடும்ப ௨றவுகள் மீது அவர்கள் வைக்கும் பாசம், அவர்களின் தன்னம்பிக்கை குணம், காதல்,  நட்பு,  தஞ்சம் ௭ன்று நம்பி வருபவர்களுக்கு தன் ௨யிரையும் கொடுக்கும்.... அந்த கரிசல்காட்டு மக்களின் வாழ்க்கை முறையை இந்தப் படம் அச்சு அசலாக காட்டப் போகிறது. படத்தின் திரைக்கதையை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்வகையில் காமெடி, ஆக்ஷன் கலந்து உருவாக்கி இருக்கிறோம்..." என்றார்.