full screen background image

“லைகாவைத் தவிர வேறு நிறுவனம் ‘கத்தி’யை வெளியிட்டால் ஆட்சேபணை இல்லை..”-எதிர்ப்பாளர்கள் அறிவிப்பு..!

“லைகாவைத் தவிர வேறு நிறுவனம் ‘கத்தி’யை வெளியிட்டால் ஆட்சேபணை இல்லை..”-எதிர்ப்பாளர்கள் அறிவிப்பு..!

“கத்தி’ படத்தை சர்ச்சைக்குரிய லைக்கா நிறுவனம் வெளியிடாமல், வேறு எந்த தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டால், எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை…” என்று ‘கத்தி’ படத்தின் எதிர்ப்பில் அணி சேர்ந்திருக்கும் 100-க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

நேற்று கிண்டியில் உள்ள ‘செக்கர்ஸ் ஓட்டலில்’ சமீபத்திய தமிழக பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கூடிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்..

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில், இந்தக் கூட்டமைப்பில் உள்ள 100-க்கும் மேற்பட்ட இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ‘புலிப்பார்வை’, ‘கத்தி’ திரைப்படங்களால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன்படி, “புலிப்பார்வை’ படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் நாம் ஆட்சேபணை தெரிவித்த காட்சிகளை நீக்கி, திருத்தம் செய்துவிட்டு மீண்டும் நமக்கு படத்தைத் திரையிட்டுக் காட்டுவதாக உறுதியளித்துள்ளனர். அவ்வாறு அவர்கள் திரையிட்டுக் காட்டிய பின் இப்படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதா அல்லது ஏற்பதா என்பது குறித்து இறுதி முடிவு செய்யப்படும்…” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் “ராஜபக்சேவின் கூட்டாளியான அல்லிராஜா புஷ்பாகரனின் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ‘கத்தி’ படம் வெளியாவதை தொடர்ந்து உறுதியாக எதிர்க்கிறோம். இது இயக்குநர் முருகதாசுக்கோ, நடிகர் விஜய்க்கோ, மற்ற கலைஞர்களுக்கோ எதிரானது அல்ல. லைக்கா நிறுவனம் வெளியிடாமல், வேறு எந்த தயாரிப்பு நிறுவனமும் ‘கத்தி’ திரைப்படத்தை வெளியிட்டால், அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை..” என்றும் முடிவெடுத்துள்ளார்களாம்.

இனி ‘கத்தி’ படம் ரிலீஸாவது விஜய் மற்றும் முருகதாஸ் கைகளில்தான் உள்ளது.

Our Score