full screen background image

‘ஹரா’ படத்தில் மோகனுக்கு ஜோடியாக அனுமோல் நடிக்கிறார்..!

‘ஹரா’ படத்தில் மோகனுக்கு ஜோடியாக அனுமோல் நடிக்கிறார்..!

14 வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ திரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார்.

இந்த ‘ஹரா’ திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் எஸ்.பி.மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா நிறுவனத்தின் ஜெயஸ்ரீ விஜய் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த ‘ஹரா’ திரைப்படத்தில் யோகி பாபு, ‘பவுடர்’ நாயகி அனித்ரா நாயர், சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

இயக்குநர் விஜய் ஸ்ரீஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக, ‘ஹரா’ படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியபோது தேதிகள் ஒத்துழைக்காததால் மோகனுக்கு ஜோடியாக நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த குஷ்பூவுக்கு பதிலாக அனுமோல் நடித்துள்ளார். அனுமோல் இந்தப் படத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கி உள்ளதாகவும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி தெரிவித்தார்.

கோத்தகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இறுதிக் கட்ட படபிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பண்டிகை வெளியீடாக விரைவில் திரையரங்குகளில் ‘ஹரா’ வெளியாகவுள்ளது.

Our Score