KH பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ODO பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘அன்னபூர்ணி’.
இந்தப் படத்தில் ‘ஜெய் பீம்’ புகழ் லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா மூவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி, வைரபாலன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இசை – கோவிந்த் வசந்தா, வசனம், பாடல்கள் – யுகபாரதி, ஒளிப்பதிவு – ஹெக்டர், படத் தொகுப்பு – கலைவாணன், கலை இயக்கம் – அமரன், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM).
த்ரில்லர் டிராமாவாக உருவாகும் இந்தப் படத்தை லயோனல் ஜோசுவா இயக்குகிறார்.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
இந்தப் படத்தின் பூஜை நேற்று காலை சென்னையில் நடைபெற்றது.