‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டில் புதிய திட்டம்..!

‘அண்ணாதுரை’ படத்தின் இசை வெளியீட்டில் புதிய திட்டம்..!

புதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர் போனவைகள்  விஜய் ஆண்டனியும், அவரது படங்களும்.

அவரது ‘சைத்தான்’ படத்தின் முதல் பத்து நிமிட காட்சிகளை படத்தின் ரிலீசுக்கு முன்பேயே வெளியிட்டு, புது விளம்பர யுக்தியை கையாண்டு வெற்றி பெற்றவர் விஜய் ஆண்டனி.

அவரது அடுத்த படமான ‘அண்ணாதுரை’யில் இதே போன்று ஒரு புதுமையைச் செய்யவுள்ளார் விஜய் ஆண்டனி.

‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ‘R ஸ்டுடியோஸ் ‘ நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக டயானா சம்பிகா மற்றும் மஹிமா நம்பியார் இருவரும் நடித்துள்ளனர்.

மேலும், இந்தப் படத்தில் நடிகர்கள் ராதாரவி, காளி வெங்கட்,  ஜூவல் மேரி, நளினி காந்த், ரிந்து ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையையும் படத் தொகுப்பையும் விஜய் ஆண்டனியே செய்துள்ளார். தில் ராஜுவின் ஒளிப்பதிவில், ஆனந்த் மணியின் கலை இயக்கத்தில், ராஜசேகரின் சண்டை இயக்கத்தில், கல்யாணின் நடன இயக்கத்தில், கவிதா மற்றும் K.சாரங்கனின் ஆடை வடிவமைப்பில், அருண் பாரதியின் பாடல் வரிகளில் இந்த ‘அண்ணாதுரை’ திரைப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் G.ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார்.

‘அண்ணாதுரை’ படத்திலும் ஒரு சுவாரஸ்யமான விளம்பர யுக்தியை விஜய் ஆண்டனி கையாளவுள்ளார். இப்படத்தின் பாடல்கள் நாளை காலை சத்யம் தியேட்டரில் வெளியிடப்படவிருக்கிறது.

பாடல்கள் வெளியான அடுத்த நிமிடமே விஜய் ஆண்டனியின் சொந்த வலைத்தளமான ‘www.vijayantony.com‘-மில் இப்படத்தின் பாடல்களை மக்கள்  இலவசமாக டவுன்லோட் செய்து கேட்டு மகிழலாம்.

ஒரே கிளிக்கில் ஒரிஜினல் தரத்தோடு டவுன்லோட் செய்து கொண்டு ரசிகர்கள் இப்பாடல்களை ரசிக்கலாம். இந்த யுக்தியை தமிழ் சினிமா துறையினர் பெரிதும் வரவேற்று உள்ளனர். இந்த புதிய முறை இனிமேல் பலருக்கும் முன் மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Our Score