full screen background image

ரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்

ரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்

‘எந்திரன்’, ’பேட்ட’ ஆகிய பிரம்மாண்ட படங்களின் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தை  சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

இப்படத்தை அஜீத்தை வைத்து ‘வேதாளம்’, ‘வீரம்’, ‘விவேகம்’ ஆிய படங்களை இயக்கிய இயக்குநரான சிவா இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – சிவா கூட்டணி முதன் முதலாக இப்படத்திற்காக இணைந்துள்ளது. இந்தப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதிஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Annaathea-Movie-Poster-1

எழுத்து, இயக்கம் – சிவா, தயாரிப்பு நிறுவனம் – சன் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் – கலாநிதி மாறன், ஒளிப்பதிவு – வெற்றி பழனிசாமி, படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – மிலன், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், நடன இயக்கம் – பிருந்தா, பிரேம் ரக்ஷித், பாடல்கள் – விவேகா, மணி அமுதவன், ஆடை வடிவமைப்பு – அனுவர்த்தன், தட்ஸா பிள்ளை, ஷ்ரவ்யா வர்மா, அனு பார்த்தசாரதி, சங்கீதா, ஒப்பனை – குப்புசாமி, உடைகள் – ராஜன், வசனம் – சிவா, சந்திரன், புகைப்படங்கள் – சிற்றரசு, துணை எழுத்தாளர் – ஆதி நாராயணா, துணை இயக்கம் – R.ராஜசேகர், ஒலி வடிவமைப்பு – உதயகுமார், விளம்பர வடிவமைப்பு – கபிலன், VFX – ஹரிஹர சுதன், சாவித்ரி முத்து, பாக்யராஜ், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத், நிர்வாகத் தயாரிப்பு – R.ரமேஷ் குச்சிராயர், S.சுரேஷ் மணியன், தாண்டவ கிருஷ்ணன், R.அன்பழகன்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

Our Score