நடிகை அஞ்சலியை கண்டுபிடிச்சாச்சு..!

நடிகை அஞ்சலியை கண்டுபிடிச்சாச்சு..!

நடிகை அஞ்சலி எங்கே என்று மீடியாக்களும் தேடிக் கொண்டிருக்கின்றன. அவருடயை சித்தியும் தேடுகிறார். நீதிமன்றமும் தேடுகிறது.. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து தனது வக்கீல்களை வைத்து வாய்தா வாங்கியே சாதனை படைத்து வருகிறார். பாதியில் நடித்து விட்டுப் போயிருக்கும் படத்தில் நடிக்க வைக்க தேடிக் கொண்டிருக்கும் இயக்குநர் மு.களஞ்சியத்தின் கண்களிலும் படாமலேயே இருக்கிறார்.

விசாரித்த மீடியாக்களிடம் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார் என்றார்கள். கல்யாணமும் ஆகிவிட்டது.. இனி இங்கே வர மாட்டார்.. கோடம்பாக்கத்தில் சிக்க மாட்டார் என்றெல்லாம் வதந்திகளை வண்டி, வண்டியாக பற்ற வைத்தார்கள்.

போன் காசை மிச்சப்படுத்தலாம் என்றெண்ணி அஞ்சலியைத் தேடுவதை நிறுத்திவிட்டு பல புதிய அஞ்சலிகளை அறிமுகப்படுத்தும் வேலையில் கோடம்பாக்கமும் இறங்கிவிட்டது. இந்த நேரத்தில் அஞ்சலி இப்போது சத்தமில்லாமல் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

கீதாஞ்சலி என்ற அந்தப் புதிய தெலுங்கு படத்தில் அஞ்சலிதான் ஹீரோயினாம். தெலுங்கு படவுலகின் மிக முக்கிய எழுத்தாளரான கோனா வெங்கட் எழுதியிருக்கும் இப்படம் ஒரு திகில் அண்ட் சஸ்பென்ஸ் படமாம். ராஜ்கிரண் என்ற புதுமுகம் இயக்கி வருகிறார். இதில் தெலுங்கின் காமெடி கிங் பிரம்மானந்தமும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஞ்சலியின் கேரக்டர் அவருடைய கேரியரிலேயே இதுவரையில் செய்திராது என்று அவரே சொல்லியிருக்கிறார். வாழ்த்துகள்..!

இந்தப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில்தான் காணாமல் போயிருந்த அஞ்சலி வாட்டசாட்டமாக திரும்பி வந்து கலந்து கொண்டிருக்கிறார். கொஞ்சம் ஊதியிருக்கிறார் என்பது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்த்தால் தெரிகிறது.. வீட்லயே இருந்துட்டார் போலிருக்கு..!

அஞ்சலிக்கான இருப்பிடம் கோடம்பாக்கத்தில் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.. அந்தத் தெனாவெட்டு கேரக்டர்களுக்கு அனன்யா பொருத்தமாக இருந்தார் அஞ்சலிக்கு முன்பு.. பின்பு அஞ்சலி.. அதன் பின்பு நஸ்ரியா பொருத்தம் என்றார்கள். இ்பபோதும் அவரும் வாலண்டரி ரிட்டையர்ட்மெண்ட் வாங்கிவிட்டார். மீண்டும் ஒரு வெற்றிடம். அஞ்சலியைவிட்டால் வேறு யார் இருக்கா..? யாராச்சும் போய் அஞ்சலி பாப்பாவை கூட்டிட்டு வாங்கப்பா..!

Our Score