full screen background image

‘பிக்பாஸ்’ அனிதா சம்பத் நடித்திருக்கும் புதிய படம்…!

‘பிக்பாஸ்’ அனிதா சம்பத் நடித்திருக்கும் புதிய படம்…!

பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் பங்கு கொண்ட டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் தற்போது தான் நடித்து வரும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் அனிதா சம்பத். அவருக்கென ரசிகர் பட்டாளம் உருவாகியது. வழக்கம்போல சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை பின் தொடரத் துவங்கினர். 

இந்த சின்ன பாப்புலாரிட்டியை பயன்படுத்தி ‘காப்பான்’ உள்ளிட்ட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார் அனிதா சம்பத். மேலும் கடந்த ‘பிக்பாஸ்-4’ நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட பின்பு இன்னும் புகழ் பெற்றுவிட்டார்.

இதைத் தொடர்ந்து தற்போது நடந்து முடிந்த விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அசத்தினார் அனிதா சம்பத். 

இந்த நிலையில் அவர் தற்போது ‘ரௌடி பேபி’ என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் செய்தியை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் ஹன்சிகா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். அவருடன் சத்யராஜ், மீனா, ராம்கி, சோனியா அகர்வால், ராய் லட்சுமி, ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ராஜா சரவணன் என்பவர் இயக்கும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்க, செல்லதுரை ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.  

Our Score