‘அரண்மனை-3’ படத்தில் ஆக்சன் காட்டும் ஆண்ட்ரியா..!

‘அரண்மனை-3’ படத்தில் ஆக்சன் காட்டும் ஆண்ட்ரியா..!

பொதுவாக சுந்தர்.சி.யின் படங்களில் எல்லாம் சண்டை காட்சிகளையே காமெடியாக்கி வைத்திருப்பார். அதிலும் கிளைமாக்ஸில் ரத்தம் சிந்துவதே காமெடியாகத்தான் இருக்கும்.

ஆனால் அவர் இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் ‘அரண்மனை-3’ படத்தில் நிஜமாகவே கமர்ஷியல் கலந்த நிஜ சண்டை காட்சியை படமாக்குகிறாராம்.

கும்பகோணத்தில் ஒரு ஷெட்யூல் ஷூட்டிங்கை முடித்துவிட்டு வந்த சுந்தர்.சி இப்போது ஸ்டூடியோவில் செட் போட்டு சண்டை காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார்.

இதில் ஆர்வத்துடன் பாய்ந்து, பாய்ந்து சண்டையிட்டுக் கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இயக்கிக் கொண்டிருப்பவர் பீட்டர் ஹெயின்.

பீட்டர் ஹெயின் பல மிகப் பெரிய ஸ்டார் நடிகர்களையே பெண்டு கழட்டியவர். இப்போது ஆண்ட்ரியாவை இயக்கிக் கொண்டிருப்பதால் சண்டை காட்சி எப்படியிருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்..!!!

Our Score