இயக்குநர் அட்லீ தயாரிக்கும் ‘அந்தகாரம்’ திரைப்படம்..!

இயக்குநர் அட்லீ தயாரிக்கும் ‘அந்தகாரம்’ திரைப்படம்..!

தமிழின் பிரபலமான இயக்குநரான அட்லீ இப்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

‘ராஜாராணி’, ‘தெறி’, ‘மெர்செல்’, ‘பிகில்’ ஆகிய நான்கு மெகா ஹிட் படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் அட்லீ. மெகா பட்ஜெட் இயக்குநரான ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

இவர் தற்போது தனது மனைவியின் பெயரில் தனது நண்பர்களுடன் இணைந்து அந்தகாரம் என்னும் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

தயாரிப்பாளர் சுதன் சுந்தரம், ஜெயராம், பிரியா அட்லீ, பூர்ணா சந்திரா ஆகிய நால்வரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

படத்தில் வினோத் கிஷன், அர்ஜூன் தாஸ், பூஜா ராமச்சந்திரன், குமார் நட்ராஜன், மீஷா கோஷல், ஜீவா ரவி, ரயில் ரவி, மகேந்திரா முல்லாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – வி.விக்னராஜன், இசை – பிரதீப் குமார், ஒளிப்பதிவு – ஏ.எம்.எட்வின் சகாய், படத் தொகுப்பு – சத்யராஜ் நடராஜன், கதை உதவி – எஸ்.பி.ஜி.பூவா பிரதாபன், எஸ்.ஷோபனா, கலை இயக்கம் – ரெம்பான் பால்ராஜ், ஒலி வடிவமைப்பு – எஸ்.அழகியகூத்தன், ஜி.சூரன், ஒலி இயக்கம் – ஜி.சுரேன், ஒலி பதிப்பு – திலீபன் இரணியன், கலரிஸ்ட் – ஜி.பாலாஜி, வண்ணம் – ஜி.பி.கலர்ஸ், ஆடியோ தின்க் மியூஸிக்,  பாடல்கள் – சிவம், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, நிர்வாகத் தயாரிப்பு – ஆர்.வாசுதேவன், தயாரிப்பு நிறுவனங்கள் – பேஸன் ஸ்டூடியோஸ், ஓ-2 பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம், ஜெயராம், பிரியா அட்லீ, கே.பூர்ணா சந்திரா, வழங்குபவர் – இயக்குநர் அட்லீ.

கண் பார்வை தெரியாத ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதையாம். இந்தப் படத்தின் டிரெயிலர் இன்று வெளியிடப்பட்டது.

எப்போதும் மெகா பட்ஜெட்டில் படம் எடுத்தே பழகிவிட்ட இயக்குநர் அட்லீ.. முதல்முறையாக தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். இதனை எப்படி அவர் தயாரிக்கிறார் என்பதைப் பார்க்க தமிழ்த் திரையுலகத்தில் பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Our Score