நடிகர்கள் அமிதாப்பச்சன், பிரபு இணைந்து பெப்சி ஊழியர்களுக்கு வழங்கும் நிவாரண உதவி..!

நடிகர்கள் அமிதாப்பச்சன், பிரபு இணைந்து பெப்சி ஊழியர்களுக்கு வழங்கும் நிவாரண உதவி..!

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே இயங்காமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் தமிழ்த் திரைப்படத் துறையும் முழுக்க மூடப்பட்டிருக்கிறது.

அன்றாடங்காய்ச்சிகளான பெப்சி ஊழியர்களுக்கு உதவ வேண்டி பல்வேறு தரப்பினரும் பெப்சிக்கு உதவித் தொகைகளையும், நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் இப்போது புதிதாக ஒரு உதவி கிடைத்திருக்கிறது. இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மேலான முயற்சியில், ‘இளைய திலகம்’ பிரபுவின் ஒத்துழைப்பில், சோனி டிவி மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து சுமார் ரூ. 12 கோடி நிதியுதவியை  FEFSI க்கு வழங்கி இருக்கிறார்கள். 

kalyan-jewellers-chennai

FEFSI இந்த தொகையை சமமாக தமது 18000 உறுப்பினர்களிடையே  ஒரு நபருக்கு ரூ. 1500 என்ற முறையில், (500 X 3) பிக் பஜார் கூப்பன்களாக தரவிருக்கிறார்கள்.

இந்தத் தகவலை பெப்சியின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை மூலமாகத் தெரிவித்திருக்கிறார்.

அந்த அறிக்கை இங்கே :

fefsi-amithab-kalyan-corona-help-news-1

fefsi-amithab-kalyan-corona-help-news-2

Our Score