full screen background image

‘அன்புள்ள கில்லி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..! 

‘அன்புள்ள கில்லி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..! 

Rise East Entertainment Pvt Ltd மற்றும்  Master Channel ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஸ்ரீநிதி சாகர், E.மாலா இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘அன்புள்ள கில்லி’.

இந்த ‘அன்புள்ள கில்லி’ படத்தில் மைத்ரேயா, துஷாரா, வி.ஜே. ஆஷிக், சாந்தினி, மைம் கோபி, நாஞ்சில் விஜயன், ‘மெளன ராகம்’ புகழ் கிருத்திகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியெம், இசை – அரோல் கரோலி, எழுத்து, இயக்கம் – ராமலிங்கம் ஸ்ரீநாத்.

இந்த ‘அன்புள்ள கில்லி’ படம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகிறது. காரணம், ஒரு லாப்ரடார் நாய் பிரதான வேடத்தில் நடித்திருப்பதுதான். வழக்கமாக நாயை மையக் கதாப்பாத்திரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட முறையில் இந்தப் படம் அமைந்திருக்குமாம்.

“கில்லி’ என்ற பெயர் கொண்ட லாப்ரடார் வகை நாயின் பார்வையிலிருந்து இந்தக் கதை சொல்லப்படுவது மிகவும் புதுமையான அம்சமாக இருக்கும்..” என்கிறார் படத்தின் இயக்குநர்.

இது குறித்து இயக்குநர் ராமலிங்கம் ஸ்ரீநாத் பேசும்போது, “இந்த ‘அன்புள்ள கில்லி’ படத்தில் பணிபுரிந்திருக்கும் அனைவரின் சுய வாழ்வும் ஒரு வகையில் இப்படத்தில் பிரதிபலித்திருக்கிறது. ஏனெனில் அவர்கள் அனைவருமே செல்லப் பிராணி வளர்ப்பவர்கள். ஒரு வகையில் அவர்களின் வாழ்வுதான் இந்தக் கதை.

இதுவரை வெளியாகியிருக்கும் மனிதன், நாய் உறவு சம்பந்தமான கதைகளிலிருந்து மாறுபட்டு தனிச் சிறப்பான அம்சத்தை கொண்டிருக்கிறது இத்திரைப்படம். மேலும் நாயின் மனக் குரலில் கதை நகருவதாய் வெளிவரும் முதல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர், நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த ‘அன்புள்ள கில்லி’ திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும்  கமர்சியல் படமாக இருக்கும். முக்கியமாக அனைவரும் குடும்பத்துடன் தியேட்டரில் ரசித்து பார்க்கும் படமாக எங்கள் படம் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் இப்படத்தை கொண்டாடுவார்கள்.

எனவே இப்படத்தை வரும் கோடை கால விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இசை மற்றும் டிரெயலர் வெளியீடு பற்றிய அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்…” என்றார்.

Our Score