அக்கா மகளை வாழ வைக்கும் தாய் மாமனின் கதை ‘அன்புக்கு பஞ்சமில்லை’

அக்கா மகளை வாழ வைக்கும் தாய் மாமனின் கதை ‘அன்புக்கு பஞ்சமில்லை’

நர்கவி டாக்கீஸ் தயாரித்துள்ள புதிய படம் ‘அன்புக்கு பஞ்சமில்லை.’

இதில் ஹீரோவாக விக்னேஷ் நடித்துள்ளார். இவருடன் ‘பந்து’ படத்தில் நாயகனாக நடித்த பிரதாப் இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும், காயத்ரி ஐயர், கஞ்சா கருப்பு, துளசி தேவர், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கே.வி. மணி, இசை – செளந்தர்யன், பாடல்கள் – அறிவுமதி, தேன்மொழி, டாக்டர் கிருதயா, செங்கதிர்வாணன், வசனம் – சேதுபதி, நடனம் – ஷாலினி சரவணன், கோபால்ஜி, கௌசல்யா, சண்டை பயிற்சி – லயன் சரா, கதை, திரைக்கதை, இயக்கம் – விவேகபாரதி. இவர் ஏற்கெனவே ‘வசந்தம் வந்தாச்சு’, ‘என்றும் ஆனந்தம்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார்.

அக்கா மகளின் வாழ்க்கைக்காக பாசப் போராட்டம் நடத்தும் தாய் மாமன்தான் கதையின் நாயகன். தன்னை காதலிக்காவிட்டாலும் அவனை காதலித்ததை பெருமையாக நினைக்கும் நாயகி.. தாய் மாமன் ஒருபுறம், அக்கா மகள் மறுபுறம்.. அக்கா மகளை காதலிக்கும் நாயகன் இன்னொருபுறம்.

இவர்களின் வாழ்வியலை தஞ்சை மாவட்டத்தில் அழகிய டெல்டா பகுதிகளில் கண்ணுக்கு இனிமையாக படமாக்கியிருக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவதும் மயிலாடுதுறை, தஞ்சையை சுற்றிதான் நடைபெற்றுள்ளது. படத்தின் உச்சகட்ட காட்சிகளை மிக அருமையாக படமாக்கியுள்ளனர்.

மிக விரைவில் படம் திரைக்கு வரவிருக்கிறது..!

Our Score