“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”

“அன்பிற்கினியாள்’ படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை…”

நடிகர் அருண் பாண்டியனின்  தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர்  கோகுல் இயக்கி இருக்கும் படம் ‘அன்பிற்கினியாள்’. இப்படத்தில் அருண் பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார்.  மலையாளத்தில் வெளிவந்த ‘ஹெலன்’ என்னும் படத்தின் ரீமேக் இதுவாகும்.

வரும் மார்ச் 5-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் நேற்று பத்திரிகையாளர்களுக்கு  பிரத்யேகமாக திரையிடப்பட்டது. திரையிடல் நிறைவடைந்த பின்னர் படக் குழுவினர் பேசினார்கள்.

நடிகர் அருண் பாண்டியன் பேசும்போது, “இந்த ‘அன்பிற்கினியாள்’ படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.  இந்தப் படத்தை நாங்கள் சீக்கிரமாகவே முடித்துவிட்டோம். கொரோனா காரணமாகத்தான் ரிலீஸ் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

நான் 18 ஆண்டுகளுக்குப் பின்னர்  இந்தப் படத்தில் நடித்துள்ளேன்.  என் மகளோடு நடித்தது நல்ல அனுபவம். எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்தவர் மியூசிக் டைரக்டர் ஜாவித். மிக சிறப்பாக உழைத்துள்ளார். இந்தப் படத்தில் வாழ்ந்தது போன்ற ஓர் உணர்வு. இந்தப் படத்தின் கேரக்டர் போல கிடைத்தால் தொடர்ந்து நிச்சயமாக நடிப்பேன்.  ஒரு நல்ல படத்தை எடுத்துள்ளோம். படத்திற்கு  மக்கள் அனைவரும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்..” என்றார்.

இயக்குநர் கோகுல் பேசும்போது, “இந்தப் படம் எனக்கு ஒரு புது ஜானராக இருக்கும் என நினைத்து செய்தேன். அருண் பாண்டியன் சார் இந்தப் படத்தின் மலையாள வெர்சனை காண்பித்து டயலாக் எழுதச்  சொன்னார். படம் பார்த்து முடித்ததும் எனக்கு பிடித்துப் போனதால். நான் அருண் பாண்டியன் சாரிடம்  படத்தை நானே இயக்குகிறேன் என்று வாய்ப்பைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.

கீர்த்தி பாண்டியன் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரின்  நடிப்பு  இந்தப் படத்தைத் தூக்கிப் பிடித்திருக்கிறது.  ஸ்பாட்டிலேயே அவர் நிறைய முறை கைத் தட்டல்களை வாங்கினார். அருண் பாண்டியன் சார் மிக சிறப்பான உழைப்பைக் கொடுத்து நடித்தார். ஜாவித் நான் வேலை செய்த இசை அமைப்பாளர்களிலே ஒன் ஆப் த பெஸ்ட் இசை அமைப்பாளர். இந்தப் படத்தில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. படத்தில் எல்லாப் பாடல்களையும் லலித் ஆனந்த் நன்றாக எழுதியிருக்கிறார்.

மீடியா எப்போதும் நல்ல படங்களை  மக்களிடம் கொண்டு சேர்க்க தவறியதே இல்லை. இந்தப் படத்தையும் மக்களிடம் மீடியா சரியாக கொண்டு சேர்க்கும் என்று நம்புகிறேன். இந்தப் படம் பெரும்  வெற்றியைப் பெறும் என்பதில்  சந்தேகமே இல்லை…” என்றார்.

இந்தப் படத்தை வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “நல்ல படங்களுக்கு ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருகிறார்கள் என்றால் அதற்கான காரணம் மீடியாதான். உங்களின் எழுத்தின் மூலமாக இந்தப் படத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.

நடிகை கீர்த்தி பாண்டியன் பேசும்போது, “இந்தப் படத்தை மிக அன்போடு எடுத்திருக்கோம். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. மேலும் படம் ப்ரீசரில் ஷுட் பண்ணும்போது நிறைய சவால்களைச் சந்தித்தோம். அதற்கான நல்ல  ரிசல்ட்டை மக்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்…” என்றார்.

இசை அமைப்பாளர் ஜாவித் பேசும்போது, “இந்தப் படத்தில் நான் நன்றாக வேலை செய்துள்ளாக சொன்னார்கள். அதற்கான காரணம் அருண்பாண்டியன் சாரும்  கோகுல் சாரும் கொடுத்த சுதந்திரமும் நம்பிக்கையும்தான். இந்தப் படத்தில் வேலை செய்ததை பெரும் கிப்டாக நினைக்கிறேன். இந்தப்படத்திற்கு நல்ல ஆதரவை தரும்படி கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.

Our Score