விஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..!

விஜய் சேதுபதியின் தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுகிறது..!

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் திரைப்படம் ‘உப்பன்னா’.

இந்தப் படத்தில் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான நடிகர் நாகேந்திர பாபுவின் மகன் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் வில்லத்தனமான நடிப்பு தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

படத்தின் விமர்சனங்கள் மற்றும் ரசிகர்களின் நேரடி பேட்டிகள் அனைத்திலும் விஜய் சேதுபதியை பாராட்டித் தள்ளியிருக்கிறார்கள். இதையடுத்து விஜய் சேதுபதி நடித்த தமிழ்ப் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்யும் பணியை சூட்டோடு சூட்டாகத் துவக்கியிருக்கிறார்கள்.

இதில் முதல் படமாக சிக்கியிருப்பது ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்னும் திரைப்படம். இத்திரைப்படம் தெலுங்கில் ‘Oka Manchi Roju Chusa Cheptha’ என்ற பெயரில் வரும் மார்ச் 19-ம் தேதி வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் கவுதம் கார்த்திக்கும், நிகாரிகா கோனிடேலாவும் நடித்திருந்தனர். நாயகி நிகாரிகா ‘உப்பன்னா’ படத்தின் ஹீரோவான வைஷ்ணவ் தேஜின் உடப் பிறந்த அக்கா என்பது இதில் சுவாரஸ்யமான விஷயம்.

விஜய் சேதுபதி நடித்த இந்த ஒரு படம் தெலுங்கில் டப் செய்யப்படும் செய்தியை அறிந்த தெலுங்கு திரையுலகத்தினர், அடுத்தடுத்து விஜய் சேதுபதி நடித்திருக்கும் தமிழ்ப் படங்களை டப்பிங் செய்யும் வேலைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ஆரஞ்ச மிட்டாய்’ ஆகிய விஜய் சேதுபதியின் படங்களை டப்பிங் உரிமைக்காக தெலுங்கு தயாரிப்பாளர்கள் இப்போது கேட்டு வருகிறார்களாம்.

Our Score