‘அன்பிற்கினியாள்’ படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது

‘அன்பிற்கினியாள்’ படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது

தமிழில் வெளிவந்த ‘அன்பிற்கினியாள்’ படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது.

மலையாளத்தில் ‘ஹெலன்’ என்ற பெயரில் வெளியான திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு பல விருதுகளையும் பெற்றிருந்தது. இத்திரைப்படம் தமிழில் கீர்த்தி பாண்டியனின் நடிப்பில் ‘அன்பிற்கினியாள்’ என்ற பெயரில் வெளிவந்தது.

ஒரு இரவில் தனியார் ஹோட்டல் ஒன்றின் குளிரூட்டப்பட்ட கிட்டங்கி அறையில் எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்ளும் ஒரு இளம் பெண் எப்படி அங்கேயிருந்து தப்பிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

மலையாளத்தில் நடிகை அன்னா பென் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தமிழில் கீர்த்தி பாண்டியன் நடித்திருந்தார். தற்போது இந்தப் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

இந்த ஹிந்தி படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஹிந்திப் படத்திற்கு மில்லி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஹிந்தியில் படத்தின் நாயகி கதாபாத்திரத்தில் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் நடிக்கவிருக்கிறார். பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மனோஜ் பஹ்வா நாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

பின்க்’ படத்திற்கு திரைக்கதை எழுதிய ரிடேஷ் ஷா இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதவுள்ளார். மலையாள ஒரிஜினல் படத்தை இயக்கிய மதி குட்டியே ஹிந்தியிலும் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

Our Score