full screen background image

இறுதி நாள் படப்பிடிப்பில் காட்சியாக்கப்பட்ட இறுதி ஊர்வலம்

இறுதி நாள் படப்பிடிப்பில் காட்சியாக்கப்பட்ட இறுதி ஊர்வலம்

தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் பெரும் நிறுவனமான Tag Entertainment   [P] ltd. சார்பில் தயாரிப்பாளர் திரு. வெண்கோவிந்தா தயாரிக்கும் திரைப்படம் ‘அம்மணி’. 

பிரபல நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். பெண்களின் சுயமுன்னேற்றத்தை வலியுறுத்திவரும்  இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இப்படத்தில் நடித்தும் இருக்கிறார்.

82 வயதான சுப்புலட்சுமி பாட்டியை மையக் கதாபாத்திரமாகக் கொண்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது ‘அம்மணி’ படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது.

_Q9A8563

‘அம்மணி’ படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் இறுதி ஊர்வலம் காட்சியாக்கப்பட்டது. இக்காட்சியில் இறந்தவராக அவரே நடித்து இயக்கவும் செய்தார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

“இக்காட்சியில் நடிக்கும்பொழுது என் மனம் மிகவும் கனத்திருந்தது. இது ஒரு இறுதி அஞ்சலி காட்சி என்பது மட்டுமல்லாமல் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு என்பது ஒரு பெரும் காரணமாய் இருந்தது. “கடைசி நாள் படப்பிடிப்பிக்கு என்னோடு வந்த எனது இளைய மகள் இந்தக் காட்சியை பார்த்து முதலில் சற்று வருந்தினாலும், இது வெறும் நடிப்புதான் எனப் புரிந்து கொண்டார்.

20150709_120553

முதல் நாள் படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் இறுதிநாள் படப்பிடிப்பும் நடந்தது குறிப்பிடத்தக்கது. எங்கள் படக் குழுவினரின் இந்த அயராத உழைப்பு கண்டிப்பாக பாராட்டுகளும் விருதுகளும் பெறும் என நம்புகிறோம்”. என மிளிரும் புன்னகையுடன் கூறினார் இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். 

Our Score