full screen background image

ராஜன் தேஜேஸ்வர் – ஐரா அகர்வால் நடிக்கும் “அமரம்” திரைப்படம்!

ராஜன் தேஜேஸ்வர் – ஐரா அகர்வால் நடிக்கும் “அமரம்” திரைப்படம்!

திவ்ய சேத்ரா பிலிம்ஸ்  பட நிறுவனம்  சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிக்கும் படம் “அமரன்”.

ராஜன் தேஜேஸ்வர் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர். 

எழுத்து இயக்கம் –  அருள் கிருஷ்ணன், இசை – மிக்கி ஜெ.மேயர், பாடல்கள் – சினேகன், சௌந்தரராஜன்.K., ஒளிப்பதிவு – பரத் குமார், கோபிநாத், எடிட்டிங் – R.ஸ்ரீராமர், கலை இயக்கம் – ஜனார்த்தனன், ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல், நடனம் – பூபதி, தயாரிப்பு மேற்பார்வை – A.P.ரவி, பத்திரிக்கை தொடர்பு – புவன் செல்வராஜ், தயாரிப்பு – C.R.ராஜன்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் அருள் கிருஷ்ணன். இவர் இயக்குநர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குநர் அருள் கிருஷ்ணன் பேசும்போது, “இப்படம் மூன்று காலகட்டங்களில்  மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும்  ஒரு அமரத்துவம் நிறைந்த காதல் கதை.

இதுவரை திரையில் பார்த்திராத அதிரடி காட்சிகளுடன்  முழுக்க முழுக்க ஆக்சன் விருந்தாக இந்த திரைப்படம் இருக்கும். மிராக்கிள் மைக்கேல்  புதுவிதமான பாணியில் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். கிளைமேக்ஸ் காட்சியில் பிரபல பாலிவுட் குழு உதவியுடன், முழுக்க ரியலாக சண்டை காட்சியை அமைத்திருக்கிறோம்.

தெலுங்கு சூப்பர் ஹிட் இசையமைப்பாளர் மிக்கி J.மேயர்   இப்படம் மூலம், தமிழுக்கு முதன்முறையாக அறிமுகமாகிறார். 4 பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் கொண்டாடும்விதமாக இருக்கும். 5000 அடி உயரத்தில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளோம். இப்படி இப்படத்திற்காக ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறோம். 

இப்படம் இதுவரை சொல்லப்படாத கிழக்கு காடு  மக்களின்  வாழ்க்கையை சொல்லும் படமாக இருக்கும். இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும்  புது அனுபவமாக இருக்கும்..” என்றார். 

இந்தப் படத்தின் முதல் பார்வையை   இயக்குநரும், நடிகருமான சசிகுமார் நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

தற்போது அது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Our Score