நடிகர் அஜித் குமாரின் 61-வது படம் இன்று காலை ஹைதராபாத்தில் பூஜையுடன் துவங்கியது.
வலிமை திரைப்படத்துக்குப் பிறகு நடிகர் அஜித் குமார் மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூரின் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘அஜித் 61’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ‘வலிமை’ படத்தைத் தயாரித்த பே வியூ பிராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய அதே நிறுவனங்கள் மீண்டும் இணைந்து தயாரிக்கின்றன.

ஒளிப்பதிவு – நிரவ் ஷா, இசை – ஜிப்ரான், படத் தொகுப்பு – விஜய் வேல்குட்டி, சண்டை பயிற்சி இயக்கம் – சுப்ரீம் சுந்தர், திலீப் சுப்பராயன், நிர்வாகத் தயாரிப்பாளர் – ஜெயராஜ் பிச்சை – தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி.சொக்கலிங்கம், டப்பிங் இன்சார்ஜ் – ஜெகன், கலரிஸ்ட் – கே.எஸ்.ராஜசேகரன், ஒலி – சின்க் சினிமாஸ், பைனல் மிக்ஸிங் – எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், கிராபிக்ஸ் சூப்பர்வைஸர் – செல்வக்குமார், போஸ்டர் வடிவமைப்பு – கோபி பிரசன்னா, இணை இயக்குநர் – சமீர் உல்லா, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன், தயாரிப்பாளர் – போனி கபூர், எழுத்து, இயக்கம் – ஹெச்.வினோத்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை ஹைதராபாத்தில் இருக்கும் பிலிம் சிட்டியில் பூஜையுடன் துவங்கியது. ஹைதராபாத்தில் 2 வாரங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இதனை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அஜித் குமாரின் 62-வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு ஆண்டு இறுதியில் தொடங்கும் என்றும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த மாதமே அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.