full screen background image

அஜீத்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்..!

அஜீத்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்..!

நடிகர் அஜீத்குமாரின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

நடிகர் அஜீத்தின் 60-வது படமான வலிமை சமீபத்தில்தான் வெளியானது. இதற்கடுத்து அஜீத்தின் 61-வது படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை படத்தை இயக்கிய இயக்குநரான ஹெச்.வினோத் இந்தப் படத்தையும் இயக்கவிருக்கிறார். இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது.

இதற்கிடையில் அஜீத்தின் 62-வது படம் பற்றிய அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்கும் என்று லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் சற்று முன் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Our Score