full screen background image

கோலாகலமாக நடந்து முடிந்த இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் திருமணம்..!

கோலாகலமாக நடந்து முடிந்த இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் திருமணம்..!

திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஷங்கரின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடந்தேறியது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான இயக்குநர் என்று பெயர் எடுத்திருக்கும் இயக்குநர் ஷங்கருக்கு, ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து இருந்தாலும் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் விருமன் படத்தின் மூலம் நடிகையானார். இந்தப் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்ததைத் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு, தருண் கார்த்திகேயன் என்பவருடன் திருமணம் நடந்தேறியுள்ளது.  இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இதையடுத்து கடந்த திங்கட்கிழமை தருண் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

?????????????????????????????????????????????????????????

இந்த திருமணத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சீயான் விக்ரம், சூர்யா, கார்த்திக், மணிரத்னம்,சுஹாசினி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் என ஒட்டு மொத்த திரைப் பிரபலங்களும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

இதையடுத்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி, ராம்சரண், சிரஞ்ஜீவி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பல முக்கிய பிரபலங்கள் சூழ நடைபெற்ற இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடி மணமக்களை உற்சாகப்படுத்தினார். டிரம்ஸ் சிவமணி இசைக்க நடனமாடிய ரன்வீர் சிங்குடன் மணமக்கள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர், இயக்குநர் அட்லி ஆகியோர் நடனமாடினர்.

இந்நிலையில், இயக்குர் ஷங்கர் தனது மகள், மருமகன் மற்றும் சம்மந்தியுடன் பத்திரிகையாளர்களுக்குத் தனி வரவேற்பு நிகழ்ச்சி வைத்துப் பெருமைப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் பேசும்போது “நான் சினிமாவில் அசிஸ்டன்ட் டைரக்டராக இல்லை. சாஃப்ட்வேர் இன்ஜினியராக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறேன்” என்றார்.

இதையடுத்து பேசிய ஷங்கர், “என் அழைப்பை ஏற்று இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய 31 வருட சினிமா பயணத்தில் உங்களுடைய பங்கு மிக முக்கியமான ஒன்று என நான் நினைக்கிறேன். அனைவரும் மனதார இந்த மணமக்களை வாழ்ந்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

Our Score