‘தனி ஒருவன்’, ‘கவன்’ உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட தயாரிப்பாளர் கல்பாத்தி S.அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது நடிகர் விஜய்யின் நடிப்பில் புதிய படத்தை உருவாக்குகிறது.
இந்தப் படம் விஜய்யின் 63-வது படமாகும். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக இன்றைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
‘வில்லு’ படத்திற்கு பிறகு விஜய்யுடன், நயன்தாரா இந்தப் படத்தில்தான் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தெறி’, ‘மெர்சல்’ வெற்றி படங்களின் வெற்றி இணையர்களான விஜய்யும், இயக்குநர் அட்லியும், மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைகிறார்கள்.
தயாரிப்பு நிறுவனம் - ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் - கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ், கதை, திரைக்கதை வசனம், இயக்கம் – அட்லி, இசை - ஏ.ஆர்.ரஹ்மான், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் - அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவு - G.K.விஷ்ணு, படத் தொகுப்பு - ரூபன் L.ஆண்டனி, கலை இயக்கம் - T.முத்துராஜ், சண்டை இயக்கம் - அனல் அரசு, பாடல்கள் – விவேக், நிர்வாக தயாரிப்பு - S.M.வெங்கட் மாணிக்கம்.
பல உச்ச பிரபலங்கள் பணியாற்றும் இப்படத்தில் இப்போது நயன்தாராவின் வரவும், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது.