full screen background image

உதயா-விதார்த் நடிப்பில் மீண்டும் ஒரு ‘அக்னி நட்சத்திரம்’..!

உதயா-விதார்த் நடிப்பில் மீண்டும் ஒரு ‘அக்னி நட்சத்திரம்’..!

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில், கார்த்திக்-பிரபு நடிப்பில் 1988-ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தை தமிழ்த் திரை ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பே இல்லை.

இப்போது இதே ‘அக்னி நட்சத்திரம்’ என்கிற பெயரில் முற்றிலும் புதிய கதைக் களத்துடன், ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லராக ஒரு திரைப்படம் உருவாகிறது.

இந்தப் படத்தை கரிஷ்மடிக் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மணிகண்டன் சிவதாஸூம், ஜேஷன் ஸ்டுடியோஸூம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தில் நடிகர்கள் உதயாவும், விதார்த்தும் நாயகர்களாக நடிக்கவுள்ளனர்.

எல்.கே.விஜய் ஒளிப்பதிவில், சில்வா மாஸ்டர் சண்டை காட்சி அமைப்பில், ஒய்.ஆர்.பிரசாத் இசைக்கு, பா.விஜய் பாடல்கள் எழுத, சான் லோகேஷ் படத் தொகுப்பைக் கவனிக்க இருக்கிறார்.

இயக்குநர்கள் நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்த்தன், மோகன் ராஜா ஆகியோரிடம் பல வெற்றிப் படங்களில் இணை – துணை இயக்குநராகப் பணியாற்றிய சரண் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

வரும் செப்டம்பர் மாதத்தில், படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், இப்படத்திற்கான மற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படம் சென்னை, ஏலகிரி, வேலூர் மற்றும் கோவையில் படமாக்கப்பட இருக்கிறது.

மணிரத்னத்தின் திரைப்படத்திற்கும், இந்த புதிய படத்திற்கும் பெயர் ஒன்றை தவிர வேறு இந்த தொடர்பும் இல்லையென்றாலும், இந்தப் பெயர் கிடைத்ததில் ஒட்டு மொத்த படக் குழுவுமே மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

Our Score