நடிகர் சூர்யா துவக்கியிருக்கும் 2-டி என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தரமான படங்களைத் தயாரிக்கும் நோக்கத்துடன் ’36 வயதினிலே’ படத்தின் மூலம் முதல் அடியெடுத்து வைத்திருக்கிறது.
பொழுதுபோக்குடனும், அதே சமயம் சமூக அக்கறையும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் கடந்த மே 15-ம் தேதியன்று வெளியாகியுள்ளது.
ஒரு அம்மாவாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, தோழியாக நம் அனைவரின் வாழ்வையும் உயர்த்துகிறார்கள் பெண்கள்.
அவர்களின் கனவுகளை திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் நிறைவேற்றும் நோக்கத்தில், 2-டி நிறுவனமும், சக்தி மசாலா நிறுவனமும் இணைந்து ஒரு புது முயற்சியை மேற்கொள்கின்றன.
“இவள் வாழ்வில் மிகப் பெரிய உயரத்தைத் தொடுவாள்..” என்று நீங்கள் நேரில் பார்த்து ஆச்சரியப்பட்ட பெண் திருமண வாழ்வுக்குப் பிறகு இப்போது எப்படியிருக்கிறார் என்பதை கவனியுங்கள்.
தன் கனவுகளை, திறமைகளை மறந்து வாழ்க்கையை தன் குடும்பம் என்ற சின்ன வட்டத்துக்குள் சுருக்கிக் கொண்டதாக உங்களுக்குத் தோன்றினால் அவர்களைப் பற்றி எங்களுக்கு எழுதுங்கள்.
உங்களின் இந்த அக்கறை சிலரின் கனவுகளை மீட்டெடுக்க துணை நிற்கும். உங்களது முயற்சி மற்றவர்களுக்கு விழிப்புணர்வாகவும், ஊக்கமாகவும் அமையும் என நம்புகிறோம்.
விதிமுறைகள் :
நீங்கள் பரிந்துரைக்கும் பெண் திருமணமானவராக இருக்க வேண்டும்.
அவரின் திறமை பற்றியும், இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்பதையும் விளக்கமாக இரண்டு பக்கங்களுக்குள் எங்களுக்கு எழுதியனுப்பவும்.
தேர்ந்தெடுக்கப்படும் பெண்களின் உண்மைத் தகவல்கள் உறுதி செய்யப்படும்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கும் இந்த புதிய முயற்சியில் நடுவர்களின் முடிவே இறுதியானது.
கடிதங்கள் எங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் : மே 20, 2015
கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி :
அகரம் பவுண்டேஷன்,
28, கிருஷ்ணா தெரு,
தி.நகர்,
சென்னை – 600017.
தொலைபேசி எண் : 7871279066
மின்னஞ்சல் முகவரி : 36dreams@agaram.in