full screen background image

“என் மகனுக்கு நான் கொடுக்கும் மிகப் பெரிய சொத்தே ரசிகர்கள்தான்” – விக்ரமின் பாசப் பேச்சு..!

“என் மகனுக்கு நான் கொடுக்கும் மிகப் பெரிய சொத்தே ரசிகர்கள்தான்” – விக்ரமின் பாசப் பேச்சு..!

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை ‘ஆதித்ய வர்மா’ என்னும் பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்கிறார்கள்.

இந்தப் படத்தில் தமிழ்த் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகராக அறிமுகமாகிறார். பனிதா சந்து, பிரியா ஆனந்த் என்ற இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். தெலுங்கு இயக்குநர் கிரிசயா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று காலை சத்யம் திரையரங்கத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

திரை பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

IMG_0626

நிகழ்ச்சியின் துவக்கத்தில் படத்தின் தயாரிப்பாளரான முகேஷ் மேத்தா பேசுகையில், “ஆதித்ய வர்மா’ படப்பிடிப்பு தளத்தில், நடிகர் விக்ரம் ஒருபோதும் உச்ச நட்சத்திரம் போல நடந்து கொள்ளவில்லை.. பாசமிக்க தந்தையாகவே நடந்து கொண்டார். 2021-ம் ஆண்டில், விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து நடித்து நம்மை மகிழ்விப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்…” என்று ஆரூடம் கூறினார்.

ravi k.chandiran

படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் பேசுகையில், “என் மகன் இந்தப் படத்தின் ஹிந்தி வெர்ஷனில் பணியாற்றினார், நான் தமிழில் பணியாற்றினேன். எங்கள் குடும்பத்திற்குள் இத்திரைப்படம் இன்பம் நிறைந்த சவாலாக இருந்தது. சவாலான இந்த நாயக கதாப்பாத்திரத்தில் துருவ் நடித்திருக்கும்விதம் பிரமாதம்…” என்றார்.

EW8A4521

இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகும் கிரிசாயா பேசுகையில், “நான் பல இயக்குநர்களிடத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன். ஆனால் எனக்கு முதல் அங்கீகாரம் தமிழ்த் திரைத் துறையில்தான் கிடைத்துள்ளது. இதற்காகத் தமிழ் திரையுலகத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சில காட்சிகளை படமாக்கும்போது இரண்டு அல்லது மூன்று டேக்குகளுக்கு மேல் சென்றதற்காக துருவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். துருவின் முதல் டேக் எப்போதுமே சிறப்பாக இருந்தது. ஐ லவ் யூ துருவ்…” என்று கூறினார்.

IMG_8869

இசையமைப்பாளர் ரதன் பேசுகையில், “என் பெயர் வித்தியாசமாக இருந்ததை வைத்து, என் தாய் மொழி தெலுங்கு என்று பலர் நினைக்கின்றனர், ஆனால் நான் ஒரு பச்சை தமிழன். இந்த மேடையில் நான் இருப்பதற்கு காரணம் நடிகர் விக்ரம்தான். தொழில் நுட்பக் கலைஞர்களை ஊக்குவிப்பதிலும், மரியாதை தருவதிலும் விக்ரமிற்கு நிகர் அவர் மட்டுமே.

ஒரு இரவு, நானும் எனது ஒலிப்பதிவாளரும் தாமதமாக வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென்று, பின்னால் இருந்து ஒரு மென்மையான குரல், ‘ஒரு கப் காபி வேண்டுமா?’ என்று அவரே கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது…” என்றார்.

priya anand

நடிகை பிரியா ஆனந்த் பேசுகையில், “எஸ்ரா’ படத்தின் மூலம் மலையாளத்தில் தன்னை அறிமுகப்படுத்தியதற்கு தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவிற்கு நன்றி. நான் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ திரைப்படத்தில், நடிகை ஸ்ரீதேவி உடன் பணிபுரிந்தபோது, அவர் ஒரு அம்மாவாக இருப்பதைக் கண்டேன்.

அதேபோல், இந்த ‘ஆதித்ய வர்மா’ படத்தில் பணிபுரிந்தபோது, விக்ரம் அவர்கள் ஒரு அக்கறையுள்ள அப்பாவாக இருப்பதை உணர்ந்தேன். துருவ் உடன் பணிபுரிவது சிறப்பாக இருந்தது, மேலும் ஆதித்யா வர்மா படமே தமிழுக்கு மிகவும்  புதியதாக இருக்கும்…” என்றார்.

panitha

படத்தின் கதாநாயகியான பனிதா பேசும்போது, “விக்ரம் அவர்களுக்கு நான் பெரிதும் கடன்பட்டிருக்கிறேன். நானும் துருவும் திரையில் அழகாக இருக்க தினமும் அயராது உழைத்ததற்கு நன்றி. துருவின் திரைப் பயணத்தின் துவக்கத்தில் நானும் பங்கெடுப்பத்திருப்பதில்  மிகவும் பெருமைப்படுகிறேன்…” என்றார்.

dhruv vikram

படத்தின் நாயகனான நடிகர் துருவ் விக்ரம் பேசும்போது, “நான் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று பேசியிருக்கிறேன். ஆனால், இந்த விழா சற்று கூடுதல் சிறப்பு, காரணம் என்னுடைய மொத்தக் குடும்பமுமே இங்கே வந்துள்ளது. எனது குடும்பத்தினால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் நான் இவ்வளவு தூரம் உயர்ந்திருக்க மாட்டேன்.

இந்தப் படத்தில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த தொழில் நுட்பக் குழுவிற்கு நன்றி. எனக்கு ஆதரவளித்த தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவுக்கும், இசையமைப்பாளர் ரதனுக்கும் ஒரு பாடலை பாட என்னை அனுமதித்ததற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆரம்பத்திலிருந்தே இப்படம் திறன் வாய்ந்தோர் உள்ளங்கைகளில் இருப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். அப்பாவுக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. இந்தப் படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு 100 சதவீதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதைவிடவும் அக்கறையும், அன்பும் அதிகம் உள்ள தந்தை என்று எனக்குத் தெரியும்…” என்றார்.

actor vikram

நடிகர் விக்ரம் பேசும்போது, “எனது 12-ம் வகுப்பு முடிவுகளுக்காக காத்திருக்கும்போதோ அல்லது ‘சேது’ திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கும்போதோ நான் ஒருபோதும் இப்படியொரு பதற்றத்தை உணரவில்லை. இன்று மட்டுமல்ல, இப்போது சில காலமாகவே நான் எப்போதும் பதற்றமாகத்தான் இருக்கிறேன்.

துருவ்வை நடிக்க வைக்கலாம் என்று வீட்டில் அனைவரும் எண்ணியிருந்தோம், ஆனால் அதற்குத் தோதான ஒரு கதைக்காகக் காத்திருந்தோம். அந்த நேரத்தில்தான் இந்தக் கதையோடு தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா வந்தார். துருவ் ச்சும்மா ஜாலிக்காக செய்திருந்த டப்ஸ்மாஷ் காட்சியைப் பார்த்தார். பார்த்தவுடனேயே ‘எனக்கு துருவ் வேண்டும்’ என்று கேட்டார். இப்படித்தான் துருவ் இந்தப் படத்தின் நாயகனானார். நாயகன் வேடத்திற்கு துருவைத் தேர்ந்தமெடுத்தமைக்கு நான் அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

மேலும் இயக்குநர் கிரீசாயா மற்றும் இணை இயக்குநரான ஷரியா இல்லாமல், இந்த படம் சாத்தியமில்லை. இன்று, இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவி.கே.சந்திரன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பது எங்களுக்கெல்லாம் பெருமையளிக்கும் ஒரு விஷயம். ஒரு காலத்தில் நானும் அவரும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். நாங்கள் கொண்ட கனவின் காரணமாக நாங்கள் இவ்வளவு பெரிய இடத்திற்கு உழைத்து வந்துள்ளோம். இதைத்தான் நான் துருவிடம் சொன்னேன்.

நான் என் மகனுக்கு கொடுக்கும் ஒரே சொத்து என் ரசிகர்கள்தான். ரசிகர்களின் அந்தத் காதல் தொடர்ந்து தலைமுறையைத் தாண்டியும் தானாகவே வருகிறது..” என்று ஆச்சரியமாகக் கூறினார்.  

Our Score