WTF என்டர்டெயின்மென்ட் மற்றும் மூமன்ட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கும் ‘மோ’ படத்தின் டீசரை உலக நாயகன் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.
இத்திரைப்படத்தில் சன் மியூசிக் சேனலின் வர்ணனையாளர் (VJ) சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, ‘காக்கா முட்டை’ நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவாரியா, ரமேஷ் திலக், செல்வா, முனீஸ்காந்த், யோகி பாபு, ‘Mime” கோபி, சிவா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
விஷ்ணு.ஸ்ரீ.கே ஒளிப்பதிவு செய்ய, சமீர்.D.சந்தோஷ் இசையமைத்துள்ளார். கலை – பாலசுப்ரமணியன், படத் தொகுப்பு – கோபிநாத். புவன் நல்லான்.R என்னும் புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் செல்வா மற்றும் ஹோசிமின் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். இந்தப் படத்தை WTF என்டர்டெயின்மென்ட் மற்றும் மூமன்ட் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையேற்ற உலக நாயகன் கமல்ஹாசன் படத்தின் இசையை வெளியிட்டார். படத்தின் டீஸரை பார்வையிட்ட கமல்ஹாசன் அதன் நேர்த்தி கண்டு பிரமித்து ‘மோ’ படக் குழுவினரை வெகுவாக பாரட்டினார்.









