full screen background image

நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..!

நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..!

‘சுந்தர பாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் ‘கொம்பு வைச்ச சிங்கம்டா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் S.R.பிரபாகரன், தற்போது ‘பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி ஒரு புதிய படத்தைத் படத்தை தயாரித்து அதற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார்.

கிரைம் த்ரில்லாராக உருவாகும் இந்த ‘பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ் No 1’ படத்தில் நடிகை தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிதான தோற்றத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார்.

மேலும் நடிகர்கள் ஜெயபிரகாஷ் (JP), ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ராம்நாத் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் ஆகியோர் அறிமுகமாகுகிறார்கள்.

தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – S.R.பிரபாகரன். தயாரிப்பு நிறுவனம் – பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ். ஒளிப்பதிவு – கணேஷ் சந்தானம், கலை இயக்கம் – மைக்கேல் ராஜ், படத் தொகுப்பு – பிஜு.V. டான் பாஸ்கோ, புகைப்படங்கள் – பாலு, தயாரிப்பு நிர்வாகம் – P.சுரேஷ், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM).

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

Our Score