full screen background image

‘பீஸ்ட்’ படத்தின் புகைப்படத்தினால் திடீர் பிரபலமான நடிகை..!

‘பீஸ்ட்’ படத்தின் புகைப்படத்தினால் திடீர் பிரபலமான நடிகை..!

பொதுவாக விஜய் நடிக்கும் படங்கள் பற்றிய ஏதாவது ஒரு துண்டு செய்தி வெளியானால்கூட அது மிகப் பெரிய பரபரப்பாகும். சமூக இணையத் தளங்களில் டிரெண்டாகும். அடுத்த 2 நாட்களுக்கு விஜய் மட்டுமே இங்கே தெரிவார். ஆனால், முதல்முறையாக இந்தக் கதை அப்படியே உல்டாவாகியிருக்கிறது.

விஜய் தற்போது நடித்து வரும் பீஸ்ட்’ திரைப்படத்தின் 100 ஆவது நாள் படப்பிடிப்பு முடிவடைந்ததையொட்டி அந்தப் படத்தின் வொர்க்கிங் ஸ்டில்ஸ் ஒன்றை அந்தப் படத்தின் இயக்குநரான நெல்சன் திலீப்குமார் தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அந்தப் புகைப்படத்தில் நடிகர் விஜய் ஸ்டைலாக ‘டிரம்ஸ்’ வாசித்து கொண்டு இருக்க, நாயகியான நடிகை பூஜா ஹெக்டே பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார். மற்ற நடிகர்களும் இசை வாத்தியங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குநர் நெல்சனும் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளார். நடிகர் விஜய்யின் ‘ஸ்டைலிஷ் லுக்’ ரசிகர்களிடையே அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. விஜய் ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை ட்ரெண்ட்டாக்கத் துவங்கினார்கள்.

இந்த நிலையில்தான் அந்தப் புகைப்படத்தில் விஜய்க்கு அடுத்தப்படியாக அதிகம் கவனம் ஈர்த்தது கீ போர்டு வாசித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் புகைப்படம். மாடர்ன் லுக்கில் இருந்த அந்தப் பெண்ணை நடிகர் ரெடின் கிங்ஸ்லி பார்த்துக் கொண்டிருப்பார்.

அந்தப் பெண், நடிகை அபர்ணா தாஸ். மலையாளத்தில் ‘ஞான் பிரகாஷன்’, ‘மனோகரம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்த பீஸ்ட்’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இதுதான் அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படமாகும்.

இந்த நிலைமையில் அந்தப் புகைப்படத்தில் அவருடைய தோற்றம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்திருப்பதால், அபர்ணா தாஸ் தற்போது சமூக இணையத்தளங்களில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறார்.

கூகிள் சர்ச்சில் நேற்றும் இன்றும் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அபர்ணா தாஸூம் ஒருவராகிவிட்டார்.

எப்போதும் தான் நடிக்கும் படங்களில் விஜய் மட்டுமே பேசுபொருளாக இருந்து வந்த சூழலில், ஒரு அறிமுக நடிகை தற்போது விஜய்யையும் தாண்டி புகழ் பெற்றிருப்பது ஆச்சரியமானதுதான்..!

 
Our Score