நேற்று முன்தினம் சென்னையில் காலமான இயக்குநர் ருத்ரய்யாவின் மரணத்திற்கு, நடிகை ஸ்ரீபிரியா இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
தனது இரங்கல் செய்தியில், “காலத்தை வென்ற தனித்தன்மை பெற்ற ‘அவள் அப்படித்தான்’ படத்தினை இயக்கிய இயக்குநர் ருத்ரையாவின் மறைவு துரதிர்ஷ்டவசமானது. ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம் என்னுடைய சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம் மட்டுமல்ல. இந்திய சினிமா வரலாற்றிலும் ஒரு முக்கியமான படமாகும்.
நான் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் இந்த சிறந்த இயக்குநருக்கு என்னால் நேரில் அஞ்சலி செலுத்த இயலவில்லை. எனவே இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என் இனிய இயக்குநரே, உங்கள் ஆத்மா சாந்தியாகட்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.