சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று மாலை சென்னை, ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், இவருடைய தம்பி சஞ்சய் கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், தங்கை மகேஸ்வரி, பிரபல அரசியல்வாதியான அமர்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் நேரில் வந்திருந்து ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் வழங்கினார்கள்.
நடன இயக்குநர் ராஜூ சுந்தரம், பிரபுதேவா, கார்த்தி, சூர்யா, சிவக்குமார், ஜோதிகா, நடிகைகள் சத்யப்பிரியா, குட்டி பத்மினி, ராதிகா, காயத்ரி ரகுராம், தயாரிப்பாளர்கள் சிவராமன், டி.ஜி.தியாகராஜன், இயக்குநர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், மீனா, சுஹாசினி, லதா ரஜினிகாந்த், லதா, சினேகா, ஒய்.ஜி.மதுவந்தி, நடிகர் வினீத், தயாரிப்பாளர் ராஜ்குமார் சேதுபதி, ராம்குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகை சோனியா அகர்வால், தயாரிப்பாளர் தாணு, நடிகை வைஜெயந்திமாலா, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.